News March 10, 2025

மகள் இறந்த துக்கம் தாளாமல் தந்தை தற்கொலை

image

ஆர்.கே.பேட்டை அடுத்த வீரானத்தூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (52), தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மகள் அர்ச்சனா கடந்தாண்டு 9ஆம் வகுப்பு படிக்கும்போது பள்ளிக்கு சரியாக செல்லாததால், தந்தை கண்டித்துள்ளார். மனவேதனை அடைந்த அர்ச்சனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தீராத மனஉளைச்சலில் இருந்து வந்த வெங்கடேசன் நேற்று முன்தினம் (மார்.8) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Similar News

News April 20, 2025

திருவள்ளூர் மாவட்ட அதிகாரிகள் எண்கள்

image

▶மாவட்ட திட்ட அலுவலர் – 044-27660421, ▶மாவட்ட கருவூல அலுவலர் – 044-27660888, ▶முதன்மைக் கல்வி அலுவலர் – 9384034214, ▶திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர், – 7373002993, ▶பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் – 7373002996, ▶திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் – 9445000412, ▶பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் – 9445000410, ▶திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் – 9445000411, ▶மாவட்ட சமூக நல அலுவலர் – 044-27663912.

News April 20, 2025

உருக்கு ஆலையில் தீப்பிழம்பு சிதறி தொழிலாளர் பலி

image

கும்மிடிப்பூண்டி அடுத்த சிந்துர்நத்தம் கிராமத்தில் உள்ள தனியார் உருக்கு ஆலையில், பீகாரைச் சேர்ந்த ராஜ்குமார் (28) ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தார். கடந்த 10ஆம் தேதி ஆலையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, தீப்பிழம்பு அவர் மீது சிதறி விபத்து ஏற்பட்டது. உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 20, 2025

சிறுவாபுரி பால சுப்ரமணியர் கோயில்

image

சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என விரும்புபவர்கள் செவ்வாய்கிழமையில் சிறுவாபுரி முருகன் கோயிலில் வேண்டிக் கொண்டால், அடுத்த ஆண்டு அதே நேரத்திற்குள் அவர்களுக்கு சொந்த வீடு கட்டி முடிக்கும் யோகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பலரின் சொந்த வீடு கனவை இந்த முருகன் நிறைவேற்றி வைத்துள்ளார். இன்றும் நிறைவேற்றி வைத்து வருவதால் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!