News March 28, 2025
மகள்களுக்கு சொத்தில் முன்னுரிமை அளிக்கும் ஊர்

ராமநாதபுரம், திருவாடனை அருகே உள்ள திருவெற்றியூரில் மகள்களுக்கு முன்னுரிமை அளித்து சொத்து எழுதி வைக்கும் பழக்கம் உள்ளது. இதற்கு காரணம் இங்குள்ள பாகம்பிரியாள் அம்மன் என்கின்றனர்.அப்பகுதி மக்கள். விஷ கடிக்கு ஆளானவனர்கள் இக்கோயிலில் உள்ள வாசுகி தீர்த்ததில் குளிப்பதன் மூலம் குணமடைவார்கள் என்பது இக்கோயிலின் நம்பிக்கை. இதனால் இந்த அம்மன் மருத்துவச்சி அம்மன் என்று அழைக்கப்படுகிறார். *ஷேர் பண்ணுங்க
Similar News
News September 18, 2025
BREAKING: பரமக்குடியில் மின்னல் தாக்கி ஒருவர் பலி

ராமநாதபுரம் அருகே ஏந்தல் காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ்(32). பார்த்திபனூர் காமாட்சி நகரில் வசித்த இவர் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இன்று (செப்.18) மாலை 5 மணியளவில் மிதமான மழை பெய்தது. அப்போது வேலை விஷயமாக மேலப்பெருங்கரை சென்ற ரமேஷ், நாடக மேடை அருகே புளியமரத்தின் கீழ் நின்றபோது மின்னல் தாக்கி இறந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதுகுறித்து பார்த்திபனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News September 18, 2025
இராமநாதபுரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (செப். 18) பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் அறிவித்துள்ளது. இராமேஸ்வரம், தனுஷ்கோடி, சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும், மாலை நேரத்தில் இராமநாதபுரம் முதுகுளத்தூர், பரமக்குடி, பார்த்திபனூர், சாயல்குடி கமுதி, அபிராமம், மஞ்சூர், மீசல், கடலாடி, திருவாடானை, பாண்டியூர், தூவல் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
News September 18, 2025
ராம்நாடு: கரண்ட் இல்லையா? இதை SAVE பண்ணிக்கோங்க..

ராமநாதபுரம் மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP செயலி மூலம் 9443111912 / 9445850811 என்ற நம்பருக்கு புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.