News February 26, 2026

மகளை பெற்ற தந்தைகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

image

மகள்களை பெறாத தந்தையரை விட, மகள்களை பெற்ற தந்தையர் 2 ஆண்டுகள் கூடுதலாக வாழ்வதாகவும், அவர்களின் மனநலமும், சுயமதிப்பும் சிறப்பாக உள்ளதாகவும் போலந்து ஆய்வில் தெரிய வந்துள்ளது. மகன்கள் இருந்தாலும், இல்லையென்றாலும் மகள்கள் இருந்தால் சராசரியாக 74 வாரங்கள் தந்தையரின் ஆயுள் கூடுகிறதாம். அதேபோல குழந்தைகள் இல்லாத பெற்றோரை விட, குழந்தைகள் உள்ள பெற்றோர் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ்கிறார்களாம்.

Similar News

News February 27, 2026

விமான பயணிகளுக்கு நற்செய்தி!

image

விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் எந்த கூடுதல் கட்டணமும் வசூலிக்காமல் முழு பணத்தையும் திரும்பத் தர என்று DGCA அறிவுறுத்தியுள்ளது. இதற்கு உள்நாட்டு பயணிகள் குறைந்தது 7 நாள்களுக்கு முன் புக் செய்திருக்க வேண்டும். அதேபோல், வெளிநாட்டு பயணிகள் குறைந்தது 15 நாள்களுக்கு முன்பே புக் செய்திருக்க வேண்டும். மேலும், விமான நிறுவனங்கள் 14 நாள்களுக்கு பணத்தை வழங்க வேண்டும்.

News February 27, 2026

மீண்டும் போட்டியிட விருப்ப மனு: PTR

image

10 ஆண்டுகள் மக்கள் பணியில் ஈடுபட்டு மீண்டும் தனது தொழில்முறைக்கு திரும்புவேன் என்று கூறியிருந்த PTR, மீண்டும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார். தனது தொகுதி மக்கள் தந்த ஆதரவும், CM ஸ்டாலினின் அமைச்சரவை வாய்ப்பும் இந்த முடிவுக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பொதுவாழ்வை தொடர முடிவு செய்துள்ள அவர், மதுரை மத்திய தொகுதி மக்களிடம் மீண்டும் ஆதரவு கோருவேன் என்று தெரிவித்துள்ளார்.

News February 27, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 622 ▶குறள்: வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும். ▶பொருள்: எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும், அறிவுடையவர்கள் மனம் தளராமல் அதை எதிர்கொள்ளும் வழியை சிந்திக்கும் போதே, அத்துன்பம் விலகிப் போய்விடும்.

error: Content is protected !!