News November 22, 2024
மகளிர் வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்வு கன்னி மற்றும் பேரிடம் பெண்கள் ஆகியோரை கைம்பெண் மற்றும் ஆதரவற்ற மகளிர் வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்காக நவ.23,24 அன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள 450 பஞ்சாயத்துகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 18, 2025
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி சட்ட வாரம்

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் டிசம்பர் 17 முதல் டிசம்பர் 26 வரை ஆட்சி மொழி சட்டவாரம் கொண்டாடப்பட உள்ளது. ஆட்சி மொழி சட்டம் வரலாறு பிழையின்றி தமிழில் குறிப்புகள் வரைமுறைகள் எழுதுவதற்கு பயிற்சி அளிக்கப்படும் மாணவர்களுக்கு பட்டிமன்றம் ஒன்றியம் வட்ட அளவில் பணியாளர்கள் பொதுமக்கள் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுடன் ஆட்சி மொழி சட்டம் குறித்து விளக்கக் கூடம் நடைபெறும் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்
News December 18, 2025
விருதுநகர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

விருதுநகர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 18, 2025
விருதுநகர்: பதட்டமான வாக்கு சாவடிகள் கணக்கெடுப்பு

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பதட்டமான வாக்குச்சாவடிகள், புதிய வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்த கணக்கெடுப்பு பணிகள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக 1200 வாக்காளர்களுக்கு கூடுதலாக உள்ள வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடி அமைப்பது பதட்டமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை இறுதி செய்வது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


