News March 9, 2025
மகளிர் தினவிழாவில் ஆவேசமடைந்த பாடகர்

சேலத்தில் நடைபெற்ற பெண்கள் தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரபல பாடகரும் நடிகருமான க்ரிஷ் கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பள்ளி குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க அடித்தால் எந்திரிக்காத அளவிற்கு தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும். பெண்களையும் சமூக வலைத்தளத்தையும் பிரிக்க வாய்ப்பே இல்லை. ரீல்ஸில் இருந்து வெளியே வந்தால் நல்ல உணவு கிடைக்கும் என்றார்.
Similar News
News September 11, 2025
சேலம்: நடுரோட்டில் பீர் பாட்டில் சண்டை!

வாழப்பாடி புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி (38). வாழப்பாடி அய்யாகவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் (37). இருவரும், புதுப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மதுபான கடை முன், நேற்று இரவு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பீர் பாட்டிலால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டு குத்திக்கொண்டனர். இதுகுறித்து தகவலின் பேரில் அப்பகுதிக்குச் சென்ற வாழப்பாடி போலீசார், இருவரையும் மீட்டு, விசாரிக்கின்றனர்.
News September 11, 2025
சேலம் செப்டம்பர் 11 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலத்தில் செப்.11 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️காலை 9 மணி முண்டாசு கவி மகாகவி பாரதியாரின் நினைவு நாள் டவுன் ரயில் நிலையம் அருகில் இருக்கும் பாரதியார் சிலைக்கு பல தரப்பினர் மாலை அணிவித்தல் ▶️காலை 10 மணி சேலம் அரசு சட்டக் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு அரசு நிகழ்ச்சி ▶️காலை 10 மணி பெரியார் பல்கலைக்கழகத்தில் விளைவு சார் கல்வி பயிற்சி பட்டறை
News September 11, 2025
சேலத்தில் வேலை தேடுபவரா நீங்கள்?

சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸில் உள்ள G.V.N. மஹாலில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.செப்.20- ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் 100- க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றனர்.இதில் 8ஆம் வகுப்ப்பு முதல் டிகிரி, டிப்ளமோ,BE,B.TECH அல்லது ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். வேலை தேடும் இளைஞர்களுக்கு இதனை SHARE பண்ணுங்க