News March 28, 2025
“மகளிர் காவல் நிலையங்களை அதிகரிக்க வேண்டும்”

புதுச்சேரி மாநிலத்தில் பெண்களின் மக்கள்தொகை வளர்ச்சியை கருத்தில்கொண்டு புதுச்சேரி மாநிலம் முழுவதும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் பெண் காவலர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த வேண்டுமென நெடுங்காடு – கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா புதுச்சேரி சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்துள்ளார்.
Similar News
News January 27, 2026
புதுச்சேரி: ஆயுளை நீடிக்கும் திருக்காமேஸ்வரர்

புதுச்சேரியில் ஸ்ரீ கோகிலாம்பாள் திருக்காமேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது, இங்கு எழுந்தருளியுள்ள சுயம்பு மூர்த்தியை தரிசித்தால் தீராத நோய்கள், கடன் பிரச்சனை ஆகியவை முழுமையாக நீங்கி ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோயிலில் திருக்கார்த்திகை, சிவராத்திரி போன்ற நாட்கள் மிகவும் விசேஷமானவை என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் நண்பர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க!
News January 27, 2026
புதுச்சேரியில் 89.87 சதவீதம் படிவம் பூர்த்தி

புதுச்சேரியில், இன்று (ஜனவரி 27) மொத்தம் உள்ள 10 லட்சத்து 21 ஆயிரத்து 578 வாக்காளர்களில், 9 லட்சத்து 18 ஆயிரத்து 111 பேர் கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பித்து, தேர்தல் துறையின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். இதில் 89.87 சதவீதம் தேர்தல் துறையின் படிவத்தை பூர்த்தி செய்துள்ளனர். புதுச்சேரியில் ஏற்கனவே இருந்த 962 ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை 1099 ஆக தற்போது உயர்த்தப்பட்டுள்ளன.
News January 27, 2026
புதுச்சேரி: 5 லட்சம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டம்

புதுச்சேரியில் வீடு கட்டிக் கொள்ள 5 லட்சம் ரூபாய் மானியம் வழங்கும், புதிய திட்டம் இன்று தொடங்கப்பட்டது. துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் இணைந்து திட்டத்தை தொடக்கி வைத்தனர். இதன் ஒரு பகுதியாக பயனாளர்களுக்கு முதல் தவணையாக தலா 1 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. இந்தத் திட்டம் குறைந்த வருமானக் குடும்பங்களின் வீட்டு கனவைக் நனவாக்கும் என தெரிவிக்கப்பட்டது.


