News May 16, 2024

மகளிர் உரிமைத் தொகை: 3,27,830 பெண்கள் பயன்

image

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் வாயிலாக விருதுநகர் மாவட்டத்தில் 3,27,830 குடும்பத் தலைவிகள் பயன்பெற்று வருகின்றனர் எனவும், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் வாயிலாக 2954 நபர்களுக்கு ரூபாய் 1.89 கோடி மருத்துவ செலவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News

News November 20, 2024

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விருதுநகர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடைச் சட்டம் 2006 ஐ  மீறி திருமணம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைகள் திருமணம் தொடர்பாக வரும் புகார்களுக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

News November 20, 2024

ரூ.20 லட்சம் மதிப்பில் சுவாச குழாய் அகநோக்கி இயந்திரம்

image

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று கூடங்குளம் அணுமின் நிலையம் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் நுரையீரல் சிகிச்சை பிரிவிற்காக ரூ.20 லட்சம் மதிப்பில்  சுவாசக் குழாய் அகநோக்கி இயந்திரம் வழங்கப்பட்டது. இதனை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

News November 20, 2024

திருச்சுழி டி.எஸ்.பி. ஜெகநாதன் பணியிட மாற்றம்

image

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சப் டிவிஷன் டி.எஸ்.பி. ஜெகநாதன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாவட்டத்தில் டி.எஸ்.பி.யாக பணிபுரிந்து வரும் பொன்னரசு திருச்சுழி டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.