News January 3, 2026
‘மகளிர் உரிமைத் தொகை ₹3,000’

தற்போது மகளிர் உரிமைத் தொகை ₹1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதனை ₹1,500 ஆக உயர்த்தப்படும் என EPS வாக்குறுதி அளித்துள்ளார். இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகையை ₹3,000 ஆக உயர்த்தி வழங்கும் வகையில் அதிமுக தேர்தல் அறிக்கையை தயார் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு பரிசீலித்து ஆலோசிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News January 5, 2026
TVK கூட்டணியில் அமமுகவா? டிடிவி சூசகம்

தவெக கூட்டணியில் இணையவிருப்பதை, இன்று நடைபெற்ற அமமுக பொதுக்குழுவில் TTV சூசகமாக வெளிப்படுத்தினார். தொண்டர்களின் மன ஓட்டத்தை அறிந்து ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வழங்கும் கூட்டணிக்குத்தான் செல்ல இருக்கிறோம்; தமிழ்நாட்டில் அமையப்போகும் கூட்டணி ஆட்சியில் அமமுக அங்கம் வகிக்கும் என தெரிவித்தார். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என விஜய் கூறி வரும் நிலையில், அதற்கு ஏற்றார் போல் TTV இவ்வாறு தெரிவித்துள்ளார்.
News January 5, 2026
BREAKING: தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

தங்கம் விலை ஒரேநாளில் இருமுறை மாற்றம் காணும் நிகழ்வு வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில், இன்று காலையில் 22 கேரட் தங்கம் சவரனுக்கு காலையில் ₹640 அதிகரித்த நிலையில், மாலையில் மேலும் ₹640 உயர்ந்து ஷாக் கொடுத்துள்ளது. சென்னையில் தற்போது, 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹12,760-க்கும், 1 சவரன் ₹1,02,080-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
News January 5, 2026
12-வது போதும்.. ரயில்வேயில் ₹35,400 சம்பளம்!

RRB-ல் காலியாக உள்ள Lab Assistant Gr. III, Senior Publicity Inspector உள்ளிட்ட 312 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன ◆12-ம் வகுப்பு முதல் டிகிரி வரை வேலைக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடுகிறது. ◆வயது: 18 – 40 ◆சம்பளம்: ₹19,900 – 44,900 வரை ◆தேர்ச்சி முறை: கணினி வழித் தேர்வு, Performance Test ◆இதற்கு வரும் 29-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்க <


