News December 29, 2025
மகளிர் உரிமைத் தொகை ₹28,000.. CM ஸ்டாலின் அப்டேட்

திமுக ஆட்சியில் 1.30 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கட்சியின் மகளிர் மாநாட்டில் பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகையால் பெண்களுக்கு சுய மரியாதை, தன்னம்பிக்கை உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், இந்த திட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதாகவும், இதுவரை குடும்ப தலைவிகளுக்கு தலா ₹28,000 வழங்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
Similar News
News January 7, 2026
ஸ்ரீவி: கத்தியால் குத்தி கொலை செய்தவர் கைது

கூமாப்பட்டி ஆத்தங்கரைப்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் (30) நெடுங்குளத்தில் தனது உறவினரான செல்வராணி வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை செல்வராணியின் சகோதரர் சுந்தரலிங்கம் என்பவர் ஈஸ்வரனிடம் தகராறில் ஈடுபட்டு ஈஸ்வரனை கத்தியால் குத்தி கொலை செய்தார். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட கூமாப்பட்டி போலீசார் சுந்தரலிங்கத்தை கைது செய்தனர்.
News January 7, 2026
பிரபல தமிழ் நடிகருக்கு திருமணம்

பிரபல இயக்குநர் தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான். இவர் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, முதல் படத்திலேயே கவனம் பெற்றார். இந்நிலையில், இவருக்கும் டாக்டர் பிரீத்தா என்பவருக்கும் ஜன.28-ல் திருப்பதியில் திருமணம் நடைபெறவுள்ளது. இதனையடுத்து பிப்.1-ல் சென்னையில் வரவேற்பு நடைபெறவுள்ளது. தற்போது பிரபலங்களுக்கு தங்கர் பச்சான் அழைப்பிதழை வழங்கி வருகிறார். நாமும் வாழ்த்தலாமே!
News January 7, 2026
விஜய் எனக்கு எதிரி இல்லை: சீமான்

விஜய்யை எதிர்ப்பதற்காக தான் கட்சி ஆரம்பிக்கவில்லை என சீமான் கூறியுள்ளார். விஜய்யுடன் தனக்கு போட்டியில்லை என்ற அவர், தன்னை எதிர்ப்பவர்கள் எல்லாம் தனக்கு எதிரி இல்லை என்றும், தான் எதிர்ப்பவர்களே தனக்கு எதிரி எனவும் பேசியுள்ளார். அந்தவகையில் இந்திய கட்சிகள், திராவிட கட்சிகள் தான் தனக்கு எதிரி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


