News August 16, 2024
மகளிர் உரிமைத் தொகை ₹1000 .. அதிகாரப்பூர்வ விளக்கம்

மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக, மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ள தமிழ்நாடு அரசு, மகளிர் உரிமை தொடர்பாக சிறப்பு முகாம் நடைபெறவில்லை என விளக்கமளித்துள்ளது. மேலும், வாட்ஸ்ஆப் உள்ளிட்டவற்றில் வெளியாகும் இதுபோன்ற போலியான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Similar News
News February 13, 2026
ஜூலை 4, 5-ல் டெட் தேர்வு.. ரெடி ஆகுங்க

ஆசிரியர் தகுதித் தேர்வுகள் வரும் ஜூலை 4, 5 ஆகிய இரு தினங்கள் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு அறிவித்துள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள உத்தேச கால அட்டவணைப்படி, ஜூலை 4-ல் முதல் தாள் தேர்வும், ஜூலை 5-ல் இரண்டாம் தாள் தேர்வும் நடக்கும். இதற்கு பிப்.18 முதல் ஏப்.10 வரை www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
News February 13, 2026
2026 TN ELECTION.. தேர்தல் ஆணையம் அறிவித்தது

5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை ECI முடுக்கிவிட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்திற்கான கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகளாக சிவஞானம், ஸ்ருதஞ்சய் நாராயணனை ECI சற்றுமுன் நியமித்துள்ளது. மேலும், தோ்தல் தொடா்பாக மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் துணை தோ்தல் ஆணையா்கள் இன்று ஆலோசனை நடத்தியுள்ளனர். இதனால், தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 13, 2026
தனுஷ் ₹20 கோடியை திரும்பித்தர கோரி நோட்டீஸ்!

தனுஷுக்கு பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2016-ல் புதிய படத்தை நடித்து, இயக்குவதாக கூறி தனுஷ் ₹20 கோடி வாங்கியதாகவும், அந்த படத்திற்கு கமிட்டாகவில்லை என்றும் தயாரிப்பு நிறுவனம் புகார் அளித்தது. இந்நிலையில், தனுஷ் கால்ஷீட் தருவது குறித்து ஒரு வாரத்துக்குள் தெரிவிக்க வேண்டும் அல்லது ₹20 கோடியை திருப்பித்தர வேண்டும் என்று நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


