News December 23, 2025
மகளிர் உரிமைத் தொகை.. மக்களுக்கு அதிர்ச்சி

மகளிர் உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ₹1,000-ல் இருந்து சில நூறுகள் அதிகரிக்கும் என செய்தி வெளியாகி இருந்தது. ஆனால், அதற்கான அறிவிப்பு இப்போது வெளியாகாது எனக் கூறப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகையை ₹1,500-ஆக உயர்த்தி வழங்குவோம் என திமுக தேர்தல் வாக்குறுதி அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்தான் உரிமை தொகை உயருமாம்.
Similar News
News December 25, 2025
பயிர் இழப்பீடு வழங்குவதில் துரோகம்: அன்புமணி

கடந்த ஆண்டில் சேதமடைந்த பயிர்களுக்கு ஓராண்டு கழித்து தற்போது தான் இழப்பீடு வழங்க நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அன்புமணி விமர்சித்துள்ளார். போன ஆண்டுக்கே இழப்பீடு வழங்கப்படாத நிலையில், இந்தாண்டுக்கான பயிர் இழப்பீடு எப்போது வழங்கப்படும் என்பது தெரியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதில் திமுக அரசின் அலட்சியமும், துரோகமும் கண்டிக்கத்தக்கவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News December 25, 2025
மகாராஷ்டிரா EX அமைச்சர் காலமானார்

EX அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சுருப்சிங் நாயக்(88) உடல்நலக்குறைவால் காலமானார். மகாராஷ்டிராவை சேர்ந்த இவர் 1978 முதல் தொடர்ச்சியாக 8 முறை நவாப்பூர் தொகுதியின் MLA-வாக இருந்துள்ளார். ‘பழங்குடியினரின் சேவகன்’ என சுருப்சிங்கிற்கு Ex PM இந்திரா காந்தி புகழாரம் சூட்டியிருக்கிறார். இவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள், மகாராஷ்டிரா DCM அஜித் பவார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #RIP
News December 25, 2025
₹20 செலுத்தினால் ₹2 லட்சம் காப்பீடு; முந்துங்க!

பிரீமியம் கட்ட பணம் இல்லை என்பதால் விபத்து காப்பீட்டை தொடங்காமல் இருக்கீங்களா? PM சுரக்ஷா பீம யோஜனா திட்டத்தில், ஆண்டுக்கு ₹20 கட்டினால் ₹2 லட்சம் வரை காப்பீடு தொகையாக பெறலாம். காப்பீடு எடுக்கும் நபர் விபத்தில் கை, கால்களை இழந்தாலோ அல்லது இறந்தாலோ, குடும்பத்தினருக்கு இந்தப் பணம் கிடைக்கும். அருகில் உள்ள வங்கிக்கு சென்று இதற்கு விண்ணப்பியுங்கள். SHARE.


