News January 19, 2026
மகளிர் உரிமைத்தொகை ₹2,000.. CM ஸ்டாலின் அறிவிக்கிறார்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை (KMUT) ₹2,000 ஆக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வரும் பேரவை கூட்டத்தொடரில் CM ஸ்டாலின் அறிவிக்கவிருந்தார். அதனை அறிந்து கொண்ட அதிமுக ரேஸில் முந்திக்கொண்டு தனது தேர்தல் அறிக்கையில் <<18879658>>’குல விளக்கு’ திட்டமாக<<>> அறிவித்துள்ளதாம். ஏற்கெனவே மகளிர் உரிமைத்தொகை உயர்த்தி வழங்கப்படும் என CM ஸ்டாலின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 5, 2026
லோக்சபாவில் 22 ஆண்டுகள் கழித்து நடந்த சம்பவம்

PM உரை இல்லாமல் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராகுல் காந்தியை பேச விடவில்லை என கூறி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், PM உரை இல்லாமல் சபை நேற்று ஒத்திவைக்கப்பட்டது. இன்றும் சபை தொடங்கியவுடன் எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், PM உரையின்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2004-ல் PM மன்மோகன் சிங்கை பாஜக நன்றி உரை தெரிவிக்கவிடாமல் செய்தது.
News February 5, 2026
நெருங்கும் தேர்தல் தேதி.. ECI முக்கிய அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் முதல் வாரத்தில் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, CEC ஞானேஷ்குமார் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் பிப்.11-ல் தமிழகம் வரவுள்ளனர். இதன்படி, சென்னையில் 2 நாள்கள் முகாமிட்டு தமிழக CEO அர்ச்சனா பட்நாயக், பொறுப்பு டிஜிபி, கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக ECI அறிவித்துள்ளது.
News February 5, 2026
4 வருஷமா டார்ச்சர் பண்றாங்க.. நடிகை ரவீனா ரவி வேதனை!

கடந்த 4 ஆண்டுகளாக சபரீஷ் மற்றும் அவரது சகோதரர் தன்னை தொந்தரவு செய்வதாக நடிகை ரவீனா ரவி பதிவிட்டுள்ளார். அவர்கள் அனுப்பிய அநாகரீகமாக மெசேஜ்ஜின் Screenshot-ஐ பதிவிட்டு, தன்னை மட்டுமின்றி வேறு சில நடிகைகளையும் இவர்கள் தொந்தரவு செய்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், பெண்களுக்கு பாதுகாப்பான நகரமான சென்னையில் இருக்கும் இவர்கள் மீது போலீஸ் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.


