News November 15, 2025
மகளிர் உரிமைத்தொகை ₹2000ஆக உயர்வா?

பிஹாரில் மகளிருக்கு ₹10,000 வழங்கப்படும் என்ற NDA அறிவிப்புதான், இண்டியா கூட்டணி கட்சிகள் படுதோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம். இதுபோன்று 2026 தேர்தலின்போதும் NDA கூட்டணியில் இருக்கும் அதிமுக முக்கிய அறிவிப்பை வெளியிடலாம். இதனால், ஆளும் திமுக, தேர்தலுக்கு முன்பாக பெண்களின் வாக்குகளை கவரும் வகையில் மகளிர் உரிமைத்தொகையை ₹2000-ஆக உயர்த்த வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர்.
Similar News
News November 15, 2025
முதல் டெஸ்ட்: அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த இந்தியா!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பொறுமையாக விளையாடி வருகிறது. 2-ம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை, 138/4 ரன்களை எடுத்துள்ளது. ஜடேஜா 11 ரன்களுடன், ஜுரெல் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென்னாப்பிரிக்கா தரப்பில் கேசவ் மகாராஜ், மார்க்கோ யான்சன், போஷ், சைமன் ஹார்மர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 21 ரன்கள் பின்தங்கியுள்ளது.
News November 15, 2025
திங்கள்கிழமை இந்த மாவட்டங்களில் விடுமுறையா?

நாளை, நாளை மறுநாள் (திங்கள்) கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரத்தில் கனமழையும், சென்னையில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. நவ.18-ல் காவிரி படுகை மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் மிக கனமழையும் தொடரும் எனவும் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், திங்கள்கிழமை அலர்ட் கொடுக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 15, 2025
இன்னும் சற்று நேரத்தில் ராகுல் காந்தி ஆலோசனை

பிஹார் தேர்தலில் 61 இடங்களில் போட்டியிட்ட காங்., 6 இடங்களில் மட்டுமே வென்றது. தேசிய கட்சியான காங்.,கிற்கு இது பெரும் பின்னடைவாக அமைந்தது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் தொடர்பாக, கட்சியின் மூத்த தலைவர்களுடன், மதியம் 12:00 மணிக்கு ராகுல் காந்தி ஆலோசனை நடத்தவுள்ளார். தொடர் தோல்விகள் தொடர்பாகவும், கட்சியின் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.


