News January 11, 2026

மகளிர் உரிமைத்தொகை உயர்வு.. இனிப்பான செய்தி

image

பொங்கல் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தி ஒன்றை CM ஸ்டாலின் அறிவிப்பார் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, மகளிர் உரிமைத்தொகையை ₹2,000 ஆக உயர்த்தி வழங்க அரசு திட்டமிடுவதாக பேசப்படுகிறது. இந்நிலையில் அமைச்சர் கொடுத்த இந்த அப்டேட், மகளிர் உரிமைத்தொகை உயர்வை பற்றியதாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News February 14, 2026

அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ₹2,000.. REQUEST

image

பொங்கல் பரிசு வழங்கப்பட்ட 2.22 கோடி ரேஷன் கார்டுகளுக்கும் <<19125836>>கோடைக்கால சிறப்பு தொகுப்பான<<>> ₹2,000-ஐ வழங்குமாறு பலரும் TN அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். உரிமைத் தொகை பெறும் 1.31 கோடி குடும்பங்களுக்கு மட்டும் வழங்குவது எந்த விதத்தில் நியாயம் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர். முன்னதாக இந்தாண்டு மட்டும்தான் கோடைக்காலம் வருகிறதா என அதிமுக, தவெக சாடியிருந்தது கவனிக்கத்தக்கது.

News February 14, 2026

சர்ச்சை பேச்சு.. அமைச்சருக்கு திமுக தலைமை செக்!

image

திமுக தலைமை அழைப்பின் பேரில் நெல்லை பொதுக்கூட்டத்தை ரத்து செய்துவிட்டு அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவசர அவசரமாக சென்னை விரைந்துள்ளார். காங்கிரஸ் உடனான கூட்டணி, திமுக 170 தொகுதிகளில் போட்டி மற்றும் தேமுதிக எல்லாம் ஒரு கட்சியா என அவர் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தேவையற்ற பேச்சுகளை தவிர்க்குமாறு அறிவுறுத்திட அவரை திமுக தலைமை அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.

News February 14, 2026

BREAKING: திமுக பேச்சாளர் சிவாஜிக்கு 3 ஆண்டுகள் சிறை

image

குஷ்பு மற்றும் கவர்னர் RN ரவி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திமுக தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கொடுங்கையூரில் நடைபெற்ற கூட்டத்தில் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!