News March 7, 2026
மகளிருக்கு ₹5 லட்சம்.. ஜாக்பாட் தேர்தல் அறிவிப்பு

மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகளை விஜய் அடுக்கியுள்ளார். அதில் குறிப்பாக, மகளிர் சுய உதவிக்குழுகளில் உறுப்பினராக இருந்து MSME நிறுவனம் தொடங்குவோருக்கு ஆண்டுக்கு 5 லட்சம் வழங்கப்படும் என அவர் வாக்குறுதி அளித்துள்ளார். இது 100% மானியம் என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார். மேலும், மகளிர் நலனுக்காக தனி இலாகா தொடங்கப்பட்டு தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் எனவும் விஜய் அறிவித்துள்ளார்.
Similar News
News April 13, 2026
அட்சய திருதியை.. தங்கம் வாங்க சிறந்த நேரம் இதுதான்!

அட்சயத் திருதியை நாளில் (ஏப்.19) தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம். எந்த நேரத்தில் தங்கம் வாங்க வேண்டும் தெரியுமா? அன்றைய தினம் காலை 10:49 மணி முதல் ஏப்.20 காலை 7:27 வரை தங்கம் வாங்க உகந்த நேரமாகும். இது ஒருபுறம் இருக்க, தங்கம் வாங்க முடியாதவர்கள் கல் உப்பு, மஞ்சள் ஆகியவற்றை வாங்கினாலும் தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. SHARE IT
News April 13, 2026
CBSE 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. புதிய அப்டேட்!

CBSE 10-ம் வகுப்பு முதல் பருவத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. உங்கள் தேர்வு முடிவுகளை https://www.cbse.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம். பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நாடு முழுவதும் நடைபெற்ற இந்தத் தேர்வுகளில் சுமார் 25 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். 10-ம் வகுப்பு இரண்டாம் பருவ பொதுத் தேர்வு மே 15 முதல் நடைபெறவுள்ளது.
News April 13, 2026
திமுக பொய் பிரசாரம் செய்கிறது: அண்ணாமலை

திமுக SM-ல் பொய் பிரசாரம் செய்வதாக சாடிய அண்ணாமலை, அளவுக்கு அதிகமான விளம்பரம் முகச்சுளிப்பையே ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார். அளவுக்கதிகமான விளம்பரம் செய்தால் தோல்வியில்தான் முடியும் என்பதை திரைப்படங்கள் மட்டுமல்ல, இதற்குமுன் நடந்த பல தேர்தல்களும் உணர்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்களின் கவனத்தை திசை திருப்புவதில் திமுகவினர் கைதேர்ந்தவர்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.


