News February 14, 2026
மகளிருக்கு ₹10,000 கொடுக்க வேண்டும்: லயோலா மணி

மகளிருக்கு அரசு வழங்கிய ₹5,000 போதாது இன்னும் ₹5,000 சேர்த்து கொடுக்க வேண்டும் என தவெகவின் லயோலா மணி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தோல்வி பயத்தில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக சாடியதுடன் ஏழை மக்களுக்கு இந்த பணம் செல்வதால் நல்லதுதான் என்றார். அதேநேரம், எவ்வளவு பணம் கொடுத்தாலும் தீயசக்தி திமுகவுக்கு பதிலாக, தூயசக்தி தவெகவை மக்கள் தேர்வு செய்வார்கள் எனக் கூறினார். உங்கள் கருத்து?
Similar News
News February 20, 2026
கறார் காட்டிய EPS.. திமுகவுக்கு ஆதரவளித்த OPS

கூட்டணி பற்றி மவுனம் காத்து வந்த OPS, இன்று <<19192311>>திமுகவுக்கு ஆதரவு<<>> கொடுத்துள்ளார். இயக்கம் ஒன்றுபட வேண்டும் என போராடிய OPS, இறுதியாக நிபந்தனை இன்றி அதிமுகவில் சேரவும் தயார் என இறங்கிவந்தார். எனினும், பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவை சுட்டிக்காட்டி இணைப்புக்கு சாத்தியமில்லை என EPS தெரிவித்துவிட்டார். இதனால், EPS-ஐ வீழ்த்தும் நோக்கில் திமுகவை OPS ஆதரித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News February 20, 2026
சட்டப்பேரவை தேர்தல் தேதி.. வெளியானது UPDATE

தமிழகத்தில் ஏறக்குறைய அனைத்துக் கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்துவிட்டன. மறுபுறம், வாக்குப்பதிவுக்கான பணிகளும் வேகமெடுக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ய, அடுத்த வாரம் (பிப்.25) CEC ஞானேஷ் குமார் தமிழகம் வரவுள்ளார். தொடர்ந்து, பிப்.27-ல் புதுச்சேரிக்கு சென்று ஆய்வு மேற்கொள்கிறார். இதனையடுத்து, மார்ச் முதல் (அ) 2-ம் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதாம்.
News February 20, 2026
குற்றம் செய்யவில்லை என நிரூபிப்பேன்: KN நேரு

அமைச்சர் <<19190599>>KN நேரு<<>> மீது ED அளித்த ஆதாரங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு செய்ய சென்னை HC உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பதை நிரூபித்துக் காட்டி வெளியே வருவோம் என KN நேரு தெரிவித்துள்ளார். மேலும், இவ்வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும், பல நேரடி வழக்குகளையும் நேரு வென்று காட்டியவர் என்றும் RS பாரதி கூறியுள்ளார்.


