News January 9, 2026
‘மகன் மீண்டும் வருகிறான்’ 62 வயதில் கர்ப்பமான பெண்!

சீனாவின் ஜிலின் மாகாணத்தை சேர்ந்த 62 வயது பெண் ஒருவர், தனது ஒரே மகனை இழந்த சோகத்தில் இருந்து மீள IVF முறையில் மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். வயிற்றில் வளரும் குழந்தை, தனது மகனின் மறுபிறவி என்று நம்பும் அவரின் வீடியோக்கள் SM-ல் விவாதத்தை கிளப்பியுள்ளன. பாசம் ஒரு பக்கம் இருந்தாலும், இந்த வயதில் இது தேவையா என்றும், ஆரோக்கியம் முக்கியமல்லவா எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Similar News
News January 26, 2026
தவெகவுக்கு டாட்டா காட்டிவிட்டதா தேமுதிக?

கூட்டணி முடிவை சஸ்பென்ஸாக வைத்திருந்த <<18961643>>பிரேமலதா<<>>, யார் அதிக தொகுதிகளை கொடுக்கிறார்களோ, அவர்களுடனே கூட்டணி என தெளிவான சமிக்ஞையை திமுகவுக்கும், அதிமுகவுக்கும் கொடுத்துவிட்டார். ஆனால், தவெகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து, எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதனால், தனித்து இருக்கும் விஜய்யை விட்டுவிட்டு, திராவிட கட்சிகளுடன்தான் கூட்டணி என்பதை அவர் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
News January 26, 2026
முதலில் கள்ள டிக்கெட் ஊழலை தடுங்க விஜய்: TTV தினகரன்

அதிமுகவை ஊழல் கட்சி என விஜய் விமர்சித்ததற்கு அதிமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. அந்தவரிசையில், TTV தினகரனும் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். எங்கள் கட்சித் தலைவரின் படத்தை வைத்துக்கொண்டு எங்களையே ஊழல் கட்சி என கூறுவதா என கேள்வியெழுப்பியுள்ளார். முதலில் உங்கள் திரைப்படத்தின் கள்ள டிக்கெட் விற்பனையில் நடைபெறும் ஊழல்களை தடுத்து நிறுத்துங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 26, 2026
ரஜினி, கமலுக்கு No சொன்னது ஏன்? லோகேஷ் விளக்கம்

ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்குவார் என பேசப்பட்டது. ஆனால் அவர் அல்லு அர்ஜுனை இயக்க டோலிவுட் சென்றுவிட்டார். இதுகுறித்து மவுனம் கலைத்த லோகேஷ், ரஜினி-கமல் படத்திற்கு ஒன்றரை மாதங்கள் கதை எழுதியதாகவும், அக்கதை அவ்விருவருக்குமே பிடித்ததாகவும் குறிப்பிட்டார். ஆனால், இருவரும் வன்முறை குறைவான படத்தை எதிர்பார்த்ததால், தன்னால் அது சாத்தியமில்லை என்று விலகிவிட்டதாக விளக்கமளித்துள்ளார்.


