News March 15, 2025
மகனை காப்பாற்ற முயன்ற தந்தை உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவளூர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பு (45). இவர், ஹாலோ பிளாக் சிமெண்ட் கற்கள் செய்யும் தொழில் செய்து வந்தார். நேற்று (மார்.14) காலை வீட்டின் அருகே உள்ள ஹாலோ பிளாக் கற்கள் செய்யும் இயந்திரத்தை அன்புவின் மகன் நிஷாந்த் தொட்டுள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை காப்பாற்ற அன்பு முயன்றபோது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தில் அவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
Similar News
News March 15, 2025
காஞ்சிபுரம்: வேலையில்லா பட்டதாரிகள் கவனத்திற்கு

காஞ்சிபுரம், ஏனாத்தூர் அமைந்துள்ள சங்கர பல்கலைக்கழகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற மார்ச் 15 சனிக்கிழமை நடைபெறுகிறது. இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் நேர்காணல் நடத்த உள்ளனர். வேலை வாய்ப்பு பெற விரும்புவோர் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். முகாம் காலை 8.30 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெறும்.
News March 15, 2025
மருத்துவர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்களுக்கு வேலை

208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தொடங்கப்பட உள்ளதால், மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் 208 மருத்துவர்கள் மற்றும் நர்சுகள், 832 மருத்துவ பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் அங்கு நியமனம் செய்யப்பட உள்ளனர். மருத்துவர்களுக்கு மாதம், ரூ.60,000, நர்சுகளுக்கு ரூ.18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 24ஆம் தேதிக்குள் இந்த <
News March 15, 2025
காஞ்சிபுரத்தில் 24,537 பேரின் வங்கி கணக்கில் பணம்

பிரதமர் கௌரவ உதவித்தொகை விவசாயிகள் அல்லாத வேறு நபர்களுக்கு சென்றுவிடக்கூடாது என இணைய வழியில் பதிவு செய்து, மத்திய அரசு கௌரவ நிதி விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வழங்கி வருகிறது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 24,537 விவசாயிகள். திருவள்ளூர் மாவட்டத்தில் 41,973 விவசாயிகள். செங்கல்பட்டு மாவட்டத்தில் 27,190 விவசாயிகள் என மொத்தம் 93,700 விவசாயிகள் பிரதமரின் கவுரவ உதவி தொகை பெறுகின்றனர்.