News February 8, 2026
ப.வேலூர் அருகே விபத்து: ஒருவர் பலி

நாமக்கல் மாவட்டம் ப.வேலூர் அருகே அனிச்சம்பாளையம் பிரிவு சாலையில் நேற்று மதியம் டூவீலரில் சென்ற கோகுல் (19) என்ற கூலித்தொழிலாளி, அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். விபத்தின்போது தலைக்கவசம் அணியாததால் தலையில் பலத்த காயமடைந்து அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ப.வேலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 18, 2026
நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்கள் வானம் தெளிவாக காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்தவரையில் குறைந்தபட்சமாக 68 டிகிரியாகவும், அதிகபட்சமாக 93.2 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சமாக 30 சதவீதமாகவும், அதிகபட்சமாக 80 சதவீதமாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
News February 18, 2026
நாமக்கல்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<
News February 18, 2026
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்!

நாமக்கல் மாவட்டம் “நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில், இதுவரை மொத்தம் 48 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் வழங்கப்பட்ட சிகிச்சைகள் அடிப்படையில் பெரியவர்கள் 46,107 பேரும், குழந்தைகள் 6,627 என மொத்தமாக 53,544 நபர்கள் பயன் பெற்றுள்ளதாக, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் துர்கா மூர்த்தி அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


