News December 23, 2025

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ‘ஜனநாயகன்’

image

விஜய்யின் கடைசி படம் என்பதால், ‘ஜனநாயகன்’ மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளன. வரும் ஜனவரி 9-ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் முன்பதிவு வெளிநாடுகளில் தொடங்கியுள்ளது. படம் வெளியாக இன்னும் 17 நாள்கள் உள்ள நிலையில், முன்பதிவிலேயே தற்போது வரை ₹4.2 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. வரும் நாள்களில் இன்னும் ஈசியாக ₹10 கோடியை நெருங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News December 25, 2025

9 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்

image

திருமணம் என்பது இவருக்கு வேடிக்கையான விளையாட்டாக இருந்துள்ளது. ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் பகுதியைச் சேர்ந்த வாணி, தனது அத்தையின் உதவியுடன், அப்பாவி இளைஞர்களை திருமணம் செய்து, பின்னர் பணத்துடன் தப்பி ஓடியுள்ளார். இதுவரை 8 பேரை திருமணம் செய்த வாணி, சமீபத்தில், 9-வது திருமணம் செய்தார். வாணியை திருமணம் செய்தவர், சந்தேகத்தின்பேரில் போலீசில் புகாரளிக்க, வாணியும் அவரது அத்தையும் தற்போது தலைமறைவாகி உள்ளனர்.

News December 25, 2025

நாட்டில் 1 லட்சத்தை கடந்த பெட்ரோல் பம்புகள்

image

சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்து உலகின் 3-வது பெரிய எரிபொருள் சில்லறை விற்பனைச் சந்தையாக இந்தியா உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், பெட்ரோல் பம்புகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்து, தற்போது 100,266 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில், 29% கிராமப்புறங்களில் அமைந்துள்ளன. மேலும், இது வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தியுள்ளது என்று IOL-ன் முன்னாள் தலைவர் அசோக் தெரிவித்துள்ளார்.

News December 25, 2025

BREAKING: தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அறிவிப்பு

image

தேர்தல் அறிக்கை தயார் செய்ய அதிமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. நத்தம் விசுவநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ்.மணி, ஆர்.பி.உதயகுமார், வைகைச் செல்வன் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். பல தரப்பட்ட மக்களின் கருத்துக்களை கேட்கும் வகையில், இக்குழுவினரின் சுற்றுப்பயண திட்டம் விரைவில் வெளியிடப்படும் என்றும் EPS அறிவித்துள்ளார்.

error: Content is protected !!