News April 6, 2025
ப்ரீமியம் சிறப்பு ரயில் டிக்கெட் கேன்சல் விதி தெரியுமா?

ப்ரீமியம் சிறப்பு ரயில்களில் டிக்கெட் கன்பர்ம் ஆகி இருந்தாலும், ஆர்ஏசி டிக்கெட் என இருந்தாலும், அது கேன்சல் செய்ய அனுமதிக்கப்படுவது இல்லை. கேன்சல் செய்ய முயன்றாலும் அதற்கான வழி இருக்காது. அதே நேரத்தில் ஏதேனும் காரணத்திற்காக அந்த ரயில் ரத்து செய்யப்படும்பட்சத்தில், டிக்கெட் தானாக கேன்சல் ஆகும். அப்போது டிக்கெட்டுக்கு நாம் செலுத்திய தொகை, உரிய பிடித்ததற்கு பிறகு திருப்பித் தரப்படும்.
Similar News
News April 8, 2025
BREAKING: ப.சிதம்பரம் ஹாஸ்பிடலில் அட்மிட்

உடல்நலக் குறைவால் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குஜராத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்க சென்றிருந்த அவர், சபர்மதி ஆசிரமத்தில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயக்கமடைந்தார். இதையடுத்து, காங்கிரஸ் நிர்வாகிகள் அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர்.
News April 8, 2025
IPL BREAKING: லக்னோ த்ரில் வெற்றி

நடப்பு ஐபிஎல் தொடரின் கொல்கத்தா, லக்னோ இடையேயான த்ரில் போட்டியில், லக்னோ அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த அந்த அணி, 20 ஓவர்களில் 238 ரன்கள் எடுத்தது. அதனை சேஸ் செய்த கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி கடைசி பந்து வரை போராடியது. இறுதியில் வெறும் 5 ரன்களில் இலக்கை எட்ட முடியாமல் தோல்வி கண்டது. KKR அணியின் கேப்டன் ரஹானே 61 ரன்கள் எடுத்தார்.
News April 8, 2025
SCக்கு அதிகாரம் இல்லை: செந்தில் பாலாஜி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவரது ஜாமின் தீர்ப்பை திரும்பப் பெறக்கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதில் பதில் மனு தாக்கல் செய்திருக்கும் செந்தில் பாலாஜி, தான் அமைச்சராக தொடரும் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறியிருக்கிறார்.