News April 12, 2025

ப்ரிமீயம் தட்கல் டிக்கெட் கட்டணம்… விதி தெரியுமா?

image

தட்கல் ரயில் டிக்கெட் போல ப்ரிமீயம் தட்கல் டிக்கெட்டும் உள்ளது. இந்த டிக்கெட்டுக்கு, ரயில் டிக்கெட் கட்டணத்துடன் சேர்த்து 10% முதல் அதிகபட்சம் 30% வரை கூடுதல் கட்டணம் விதிக்கப்படும். அதாவது அதிகபட்சம் ரூ.400 வரை கட்டணம் பெறப்படும். தட்கல் டிக்கெட்டுக்கான அனைத்து விதிமுறைகளும் இந்த டிக்கெட்டுக்கும் பொருந்தும். கன்பர்ம் ஆன ப்ரீமியம் தட்கல் டிக்கெட்டை கேன்சல் செய்தால் ரீபண்ட் தரப்படாது.

Similar News

News February 2, 2026

பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய டெல்லி அணி

image

WPL 2026 தொடரின் லீக் சுற்றின் கடைசிப் போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி யுபி வாரியர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த யுபி, 122/8 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி, 18.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. எலிமினேட்டர் போட்டியில் டெல்லி, குஜராத் அணியை எதிர்கொள்ளும். இதில் வெற்றி பெறும் அணி பைனலில் ஆர்சிபியை எதிர்கொள்ளும்.

News February 2, 2026

ராசி பலன்கள் (02.02.2026)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News February 2, 2026

40 மணி நேரம் மோதல்.. 193 பேர் உயிரிழப்பு!

image

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் BLA அமைப்பினருக்கும் ராணுவத்திற்கும் இடையே 40 மணி நேரமாக நடந்த சண்டையில் 193 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 145 பேர் தீவிரவாதிகள், 17 போலீசார் மற்றும் 31 பொதுமக்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குவெட்டா உள்பட 12 பகுதிகளில் மோதல்கள் நடைபெற்றன. பாகிஸ்தானின் நிலப்பரப்பில் 42%-ஐ கொண்டுள்ள பலுசிஸ்தான் பல ஆண்டுகளாக சுதந்திரத்திற்காக போராடி வருகிறது.

error: Content is protected !!