News December 23, 2024
போளூர் அருகே டிராக்டர் கவிழ்ந்து விபத்து

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த பெரிய கிராமம் கல்லாங்குத்து குன்னத்தூர் சாலையில் ஒரு வருடத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட தார் சாலை மழையால் சேதம் அடைந்ததால் அந்த வழியாக இன்று (டிசம்பர் 23) காலை டிராக்டர் விவசாய நிலத்திற்கு பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்லும்போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து போளூர் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Similar News
News August 21, 2025
தி.மலை மக்களே இந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா

கடந்த ஆண்டு 30 பேர் தி.மலை மாவட்டத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 2000 பேருக்கு அறிகுறி கண்டறியப்பட்டு, 8 பேருக்கு தொழுநோய் உறுதி செய்யபட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தீவிர தொழுநோய் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகிறது. தொழுநோயை பற்றி தெரிந்து கொள்ள இங்கு <<17469663>>கிளிக்<<>> பண்ணுங்க.
News August 21, 2025
தி.மலை: தொழுநோய் அறிகுறிகள்

தோலில் நிறமாற்றம், உணர்ச்சியற்ற தேமல், தோல் தடித்து காணப்படுதல், தோல் பளபளப்பாக இருத்தல் அல்லது எண்ணெய் பூசியது போல் இருத்தல் போன்றவை இதன் அறிகுறிகள். அறிகுறிகள் தென்பட்டால் பயம் கொள்ளாமல் அருகில் உள்ள அரசு மருத்துவ மனைகள் மூலம் 6 மாதம் முதல் 1 வருடம் வரை சிகிச்சை பெற்று குணமடையலாம். *ஷேர் பண்ணுங்க. முன்னதாகவே தற்காத்து கொள்வது சால சிறந்தது*
News August 21, 2025
தி.மலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (ஆகஸ்ட் 21) நடைபெறும் இடங்கள் அதன் விவரம் மேலே உள்ள படத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித்தொகை, வாரிசு, வருமானம், இருப்பிடம், சாதி, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களுக்கு மனு அளித்து பொதுமக்கள் பயன்பெறலாம். மேலும் இந்த முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.