News November 17, 2025

போலீஸ் மீது தாக்குதல்? பழனி அருகே பரபரப்பு!

image

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் குடிபோதையில் காவலரை தாக்கியதாக சகோதரா்கள் உள்ளிட்ட நால்வரை போலீஸாா் கைது செய்தனா். இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் பழனி, கொடைரோடு பகுதிகளைச் சோ்ந்த சின்னத்துரை மகன் நித்தியானந்தம் (35), ஆறுமுகம் மகன்கள் வீரசேகா் (32), மணிகண்டன் (28), திருப்பூரைச் சோ்ந்த சுப்பிரமணியம் மகன் அருள்குமாா் (40) என தெரியவந்தது.

Similar News

News November 17, 2025

திண்டுக்கல்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <>இங்கே கிளிக் <<>>செய்து எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க

News November 17, 2025

திண்டுக்கல் காவல்துறை எச்சரிக்கை

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, ஒவ்வொரு நாளும் இணையப் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு குறித்த புகைப்படங்களை வெளியிடுகிறது. இதன் தொடர்ச்சியாக, (நவம்பர் 16) இன்று “தேவையற்ற மின்னஞ்சல்கள் மற்றும் லிங்குகளை திறந்து உங்களது தகவல்களை இழக்க வேண்டாம்” என்ற குறிப்பு கொண்ட விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டது.

News November 16, 2025

திண்டுக்கல்: ஆசிரியர் தகுதி தேர்வு 514 பேர் ஆப்சென்ட்

image

இடைநிலை மற்றும் பட்டதாரி பயிற்சி முடித்தவர்களுக்கு நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 3,490 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். மாவட்டம் முழுவதும் 11 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதில் 2,976 பேர் தேர்வு எழுதியனர், 514 பேர் ஆப்சென்ட் இருந்தனர்.

error: Content is protected !!