News May 3, 2024
போலி மருத்துவர்கள் குறித்து தெரிவிக்கலாம்

ராணிப்பேட்டை, சத்திரம் புதூர் பகுதியில் போலியாக மருத்துவம் பார்த்த திவ்யா என்ற பெண் இன்று கைது செய்யப்பட்டதை தொடர்ந்து. ராணிப்பேட்டை மாவட்டத்தில் மருத்துவம் படிக்காமல் போலியாக கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்தால் அருகில் உள்ள காவல் நிலையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News August 26, 2025
ராணிப்பேட்டை: B.E, B.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் காலியாக உள்ள உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E, B.Sc,BCA, MCA,M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 26, 2025
ராணிப்பேட்டை: முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஆக.26) தொடங்குகிறது. ராணிப்பேட்டையில் உள்ள பல்வேறு மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது. இதில் கைப்பந்து போட்டி, கால்பந்து, மேசைப்பந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து, சிலம்பம், நீச்சல், கபடி, தடகளம், கேரம் பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது .
News August 26, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம் அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வரும் 28.08.2025 அன்று நடைபெற உள்ளது. இம்முகாம் மேல்விசாரம் நகராட்சி சார்பில் அண்ணாசாலை, மேல்விஷாரம், இஸ்லாமியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது குறைகள், மனுக்கள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக பெற்றுக்கொண்டு விரைவான தீர்வுகள் காண இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.