News January 16, 2026
போர் பதற்றம்.. இந்தியர்களுக்கு உதவு எண்கள் அறிவிப்பு

ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையே போர் மூளும் சூழல் அதிகரித்து வருவதால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனால், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் கவனமாக செயல்பட அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்தியர்கள் தேவையில்லாமல் இஸ்ரேல் செல்ல வேண்டாம் என கூறியுள்ள தூதரகம், +972-54-7520711, +972-54-3278392 ஆகிய அவசரகால உதவி எண்களையும் அறிவித்துள்ளது.
Similar News
News April 6, 2026
3 மேட்ச்சில் வெறும் 24 ரன்கள்.. கிரீன் பரிதாபங்கள்

KKR அணியால் ஏலத்தில் ₹25.20 கோடிக்கு வாங்கப்பட்ட கேமரூன் கிரீன் நடப்பு IPL-ல் மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்திருக்கிறார். கடந்த 3 போட்டிகளில் அவர் 24 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மேலும், இன்னும் சில போட்டிகளுக்கு பிறகே அவர் பந்துவீசுவார் என கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகைக்கு எடுத்த வீரர் சரியாக ஆடாதது KKR ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
News April 6, 2026
தமிழ்நாட்டில் அடுத்து யார் ஆட்சி.. புதிய கருத்துக்கணிப்பு

தமிழக தேர்தலையொட்டி Inside Election அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது. அதில், 44% வாக்குகளுடன் 159 – 165 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 64 – 70 இடங்களில் (33% வாக்குகள்) அதிமுக கூட்டணியும், 4 – 6 தொகுதிகளில் (18% வாக்குகள்) தவெகவும் வெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாதக 3% வாக்குகளை பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. SHARE IT
News April 6, 2026
சர்க்கரை நோயை அதிகரிக்கும் காற்று மாசு

சிகரெட், மது, எய்ட்ஸ், காசநோய் போன்றவற்றால் உயிரிழப்பவர்களை விட, காற்று மாசால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்கள் அதிகம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். மாசுபட்ட காற்றில் உள்ள PM 2.5 என்ற நுண்ணிய துகள்கள், ரத்தத்தில் இன்சுலினை அதிகரித்து, சர்க்கரை நோயை உண்டாக்குகிறதாம். தாய் வயிற்றிலிருக்கும் போதே, காற்று மாசால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு High BP ஏற்படும் ஆபத்து அதிகமாம். SHARE IT


