News March 26, 2026

போர் நெருக்கடி.. CM-களுடன் நாளை மோடி ஆலோசனை

image

அனைத்து மாநில CM-களுடன் PM மோடி நாளை மாலை ஆலோசனை நடத்தவுள்ளார். காணொலி வழியாக நடக்கும் இக்கூட்டத்தில் மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் தொடர்பாக ஆலோசிக்கப்படும். நடத்தை விதிகள் காரணமாக தேர்தல் நடைபெறும் 5 மாநில CM-கள் இதில் பங்கேற்க மாட்டார்கள். பதிலாக அம்மாநில தலைமை செயலர்களுக்கு தனியே கூட்டம் நடத்தப்படும்.

Similar News

News March 29, 2026

காட்டுமன்னார் கோவிலில் திருமாவளவன் போட்டி

image

திமுக கூட்டணியில் 8 இடங்களை பெற்ற விசிகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. கட்சியின் தலைவர் திருமாவளவன் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடுகிறார். அதேபோல், சிந்தனைச் செல்வன் (செய்யூர்) வன்னியரசு (திண்டிவனம்), எழில் கரோலின் (அரக்கோணம்) , பன்னீர்தாஸ் (திருப்போரூர்),
அப்துல் ரகுமான் (பண்ருட்டி), மாலதி (கள்ளக்குறிச்சி), சக்திவேல் (பெரியகுளம்) ஆகியோர் வேட்பாளர்களாக களமிறங்குகின்றனர்.

News March 29, 2026

புதன்கிழமை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

பங்குனி உத்திர விழாவையொட்டி, ஏப்.1-ம் தேதி (புதன்கிழமை) தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படாது. அதேபோல், நார்த்தாமலை தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்.6-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். இதனை ஈடுசெய்ய ஏப்.18 வேலைநாளாகும். முழு ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது பொருந்தாது. SHARE IT

News March 29, 2026

5 ராசியினருக்கு எச்சரிக்கை

image

சூரிய பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்திருப்பதால், 5 ராசியினருக்கு கஷ்ட காலமாக அமையும் என ஜோதிடர்கள் கணிக்கின்றனர். அதன்படி, *மேஷம்: பழைய விஷயங்களால் மன அழுத்தம் அதிகரிக்கும். *சிம்மம்: உடல்நலனில் கவனம் தேவை. *கன்னி: சிக்கனமாக செலவு செய்வது நல்லது. *தனுசு: குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். *மீனம்: மன அழுத்தமும், மன உளைச்சலும் ஏற்பட வாய்ப்புள்ளது. கவனமாக இருங்கள்!

error: Content is protected !!