News December 5, 2025
போர் அடிக்குது’னு ரீல்ஸ் பாக்குறீங்களா?

தொடர்ந்து ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருப்பதும் ஒருவித போதைக்கு அடிமையான நிலைதான் என மனநல நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதன் காரணமாக, Brain rot (மூளை அழுகல்) & கண் நோய்கள் அதிகரிக்கிறதாம். அதிகமாக ரீல்ஸ் பார்ப்பதால் குழந்தைகளுக்கு சுறுசுறுப்பு தன்மை குறைந்து, Dry eye syndrome பாதிப்பு அதிகரிக்கிறதாம். மேலும், பெரியவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுவதுடன் ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை போன்றவை உண்டாகிறதாம்.
Similar News
News March 6, 2026
பால் உற்பத்தியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சாவூர் மாவட்டம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் 440 சங்கங்கள் உள்ளன. சங்கங்களுக்கு பால் உற்பத்தி செய்து வழங்கும் உற்பத்தியாளருக்கு பல்வேறு ஊக்கத்தொகை சிறப்பு தொகை வழங்கப்பட்டு வருகிறது. எனவே பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கி பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.
News March 6, 2026
சிறுமியிடம் டிரம்ப் பாலியல் அத்துமீறலா?

எப்ஸ்டீன் வழக்கில் காணாமல் போன 16 பக்க ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில் 1983-ம் ஆண்டு டிரம்ப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி ஒருவர் FBI-யிடம் தெரிவித்துள்ளார். தான் தடுத்தபோது டிரம்ப் தன்னை தாக்கியதாகவும் அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த பதிவுகள் இத்தனை ஆண்டுகளாக ஏன் மறைக்கப்பட்டன என்ற கேள்வி US அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 6, 2026
இன்று சனிப்பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு பணம் கொட்டும்

கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இன்று பெயர்ச்சி அடைந்த சனி பகவான் மார்ச் 13-ல் அஸ்தமனம் ஆகிறார். இதனால், 3 ராசியினருக்கு ஜாக்பாட் அடிக்குமாம். *மேஷம்: நிதி நிலைமை மேம்படும். உடல்நலப் பிரச்னை குறையும். *விருச்சிகம்: வேலை, தொழிலில் முன்னேற்றம். கடன் சுமை அகலும். *கும்பம்: சொத்து விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். புதிய வருமான வழிகள் திறக்கப்படும்.


