News December 31, 2024
போராட வந்த நாம் தமிழர் கட்சியினர் கைது

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில் போராட்டத்திற்கு வருமாறு கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்திற்கு வந்த நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
Similar News
News December 19, 2025
சென்னை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி

தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது ’TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News December 19, 2025
சென்னை: Diplomo/Degree/ ITI முடித்திருந்தால் ரூ.1லட்சம் சம்பளம்

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) காலியாக உள்ள 764 Senior Technical Assistant மற்றும் Technician பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் ITI முடித்திருந்தது 18 முதல் 28 வயது உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.1,12,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன-01 குள் <
News December 19, 2025
சென்னை: சாலையில் பள்ளம் தோண்ட விதிக்கப்பட்ட தடை விடுவிப்பு

சென்னை மாநகரில் மழைக் காலத்தில், சாலையில் தோண்டினால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவர் என்பதால், வடகிழக்கு பருவமழையொட்டி, சென்னை மாநகராட்சியில் சாலை வெட்டு பணிக்கு, கடந்த மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது. மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளத்தில் சாலை வெட்டு பணிக்கு விண்ணப்பிக்கலாம் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.


