News February 5, 2026
போராட்டத்தை அறிவித்தார் EPS

டாஸ்மாக் ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுக சார்பில் பிப்.11-ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்படும் என EPS அறிவித்துள்ளார். பணி நிரந்தரம், ஊழியர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை டாஸ்மாக் ஊழியர்கள் கோரி வருகின்றனர். இந்நிலையில் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் தங்கமணி தலைமையில் சிந்தாதிரிப்பேட்டை முதல் டாஸ்மாக் தலைமை அலுவலகம் வரை பேரணி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News February 13, 2026
மறைவுக்கு பின் ரோபோ சங்கருக்கு கிடைத்த கௌரவம்

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் இன்று வழங்கப்பட்டன. இதில், ரோபோ சங்கருக்கு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான 2 விருதுகள் (வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், இரவில் நிழல்) வழங்கப்பட்டது. விருதை பெற்றுக் கொண்ட அவரது மகள் இந்திரஜா, இந்த இடத்தில் அப்பாவை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என உருக்கமுடன் தெரிவித்தார். மேலும், சினிமாத்துறையில் அப்பாவுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்றும் அவர் குறிப்பிட்டார்.
News February 13, 2026
சிறந்த நடிகர் தனுஷ், நடிகை சாய் பல்லவி (PHOTOS)

2016-2022 மாநில அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான விருதை கார்த்தி, தனுஷ், சூர்யா விஜய் சேதுபதி ஆகியோரும் சிறந்த நடிகைக்கான விருதை சாய் பல்லவி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும் பெற்றுக் கொண்டனர். அத்துடன் மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கார்கி ஆகியவற்றுக்கு சிறந்த திரைப்படங்களுக்கான விருது வழங்கப்பட்டது.
News February 13, 2026
விஜய்யால் ஒரு சீட் கூட வெல்ல முடியாது: நயினார்

2 ஆண்டுகளில் தவெகவிற்கு 30% வாக்குகள் வந்துவிட்டதாக விஜய் கூறியதற்கு, கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம் என்ற பழமொழியை நயினார் ஒப்பிட்டு பேசியுள்ளார். முதலில் விஜய் வீட்டைவிட்டு வெளியே வந்து கட்சி நடத்தட்டும் எனக் குறிப்பிட்ட அவர், தனக்கு விஜய் ஒரு பொருட்டே கிடையாது என்றார். மேலும் தேர்தலில் அவரால் ஒரு சீட் கூட வெல்ல முடியாது என்றும் விமர்சித்தார்.


