News March 25, 2025
போராட்டத்தில் குதித்த நடிகை சோனா

நடிகை சோனா தனது வாழ்க்கை வரலாற்றை ‘ஸ்மோக்’ என்ற தலைப்பில் வெப் சீரிஸாக எடுத்து வருகிறார். படப்பிடிப்பிற்கான ஹார்ட் டிஸ்குகளை தனது மேனஜர் எடுத்துக் கொண்டு தன்னை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி வடபழனியில் உள்ள பெப்சி யூனியனில் புகார் அளித்ததோடு, கடந்த சில நாட்களாக அங்கும் இங்கும் அலைக்கழிப்பதாக நேற்று (மார்.24) ஃபெப்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
Similar News
News October 18, 2025
சென்னை மக்களே வீடுகளில் இனி இது கட்டாயம்

சென்னை உட்பட அனைத்து பகுதிகளிலும் அடுக்குமாடி குடியிருப்புகளை போல தனி வீடுகளுக்கு பார்க்கிங் கட்டாயம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 3,300 சதுர அடி வரையிலான தனி வீடுகளில் 2 பைக், 2 கார்கள், 3,300 சதுரஅடிக்கு மேல் உள்ள வீட்டில் 4 பைக், 4 கார்கள் நிறுத்துமிடம் ஒதுக்குவது கட்டாயம் என விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. *தெரிந்தவர்களுக்கு மறக்காம இதை தெரியப்படுத்துங்க*
News October 18, 2025
சென்னை: டிப்ளமோ போதும்.. ரயில்வேயில் வேலை

ரைட்ஸ் எனப்படும் ரயில்வே நிறுவனத்தில் சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் காலியாக உள்ள 600 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அனைத்து பதவிகளுக்கும் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். இதற்கு 18- 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.16,338 -ரூ 29,735 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.12க்குள் <
News October 18, 2025
ஸ்தம்பித்தது சென்னை

தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனால் சென்னையில் இருந்து நேற்று சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர். இதனால் சென்னை கிளாம்பாக்கம், மாமண்டூர் பாலம், சிங்கம்பெருமாள் கோவில் உள்பட பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் சுமார் 2 கிலோமீட்டர் வரை அணிவகுத்து நின்றதால் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. *இதுகுறித்து உங்க கருத்து என்ன*