News January 6, 2026

போப் மறைவால் ரோம் படைத்த சாதனை!

image

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித ஆண்டில் சுமார் 3.35 கோடி சுற்றுலா பயணிகள் ரோமுக்கு வந்துள்ளதாக இத்தாலிய அரசு தெரிவித்துள்ளது. போப் பிரான்சிஸ் மறைவு மற்றும் புதிய போப் லியோவின் பதவியேற்பு ஆகியவை இதற்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கின்றனர். அத்துடன் அமைதி, மன்னிப்புக்கான காலமாக 25 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் புனித ஆண்டில் அங்குள்ள புனித வாசல்களில் நுழையவும் அதிக பயணிகள் ரோமுக்கு சென்றுள்ளனர்.

Similar News

News January 27, 2026

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

image

மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, நாளை (ஜன.28) திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து கலெக்டர் மோகனச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதனால், அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. அதேபோல், தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி, கரூர் வட்டத்திற்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 27, 2026

பெண்களுக்கு CM ஸ்டாலின் கொடுத்த Promise

image

சென்னையில் மகளிர் உச்சிமாநாட்டை தொடங்கி வைத்து, CM ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அதில் இந்தியாவில் பெண்கள் அதிகம் வேலைக்கு செல்லும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாக தெரிவித்த அவர், பெண்கள் சமூகத்தின் முதுகெலும்பு என குறிப்பிட்டுள்ளார். மேலும், பெண்கள் மரியாதையான ஊதியத்தை பெற்றிடவும், அச்சம் இல்லாமல் வாழவும் திமுக அரசு துணை நிற்கும் என்ற Promise-ஐ தான் வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

News January 27, 2026

வெள்ளி விலை கிலோ ₹12,000 உயர்ந்தது

image

தங்கம் விலை இன்று (ஜன.27) சவரனுக்கு ₹520 குறைந்த நிலையில், வெள்ளி விலை அதற்கு நேர்மாறாக அதிகரித்துள்ளது. 1 கிராம் ₹12 உயர்ந்து ₹387-க்கும், 1 கிலோ ₹12,000 உயர்ந்து ₹3.87 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. தங்கம் விலைக்கு இணையாக வெள்ளி விலையும் அதிகரித்துக் கொண்டே வருவதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம், தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!