News January 29, 2026

போன் ஒட்டுக்கேட்பு வழக்கில் Ex CM-க்கு நோட்டீஸ்

image

தெலங்கானாவில் அரசியல் தலைவர்கள், பிரபலங்களின் போன்கள் ஒட்டுக்கேட்பு வழக்கை சிறப்பு புலனாய்வு குழு (SIT) விசாரித்து வருகிறது. இதில், ஏற்கெனவே Ex-CM சந்திரசேகர ராவின் மகன் KTR-டம் 8 மணிநேரம் SIT கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியது. இந்நிலையில் சந்திரசேகர ராவிடம் விசாரணை நடத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிக்கு நிதி பெற்றது பற்றியும் நாளை அவரிடம் விசாரிக்கப்படவுள்ளது.

Similar News

News February 12, 2026

4,998 பேர் மட்டும் வாங்க.. தவெக விடுத்த வேண்டுகோள்!

image

சேலம், சீலநாயக்கன்பட்டியில் நாளை தவெக நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறவுள்ளது. பிற்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை 4,998 பேருக்கு மட்டுமே காவல்துறை அனுமதி வழங்கியுள்ளதாக புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். ஆதலால், QR குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு உள்ளவர்கள் மட்டும் நாளை கூட்டத்திற்கு வாருங்கள்; அனுமதி சீட்டு இல்லாதவர்கள் வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News February 12, 2026

போன் திருட்டு.. இந்த ட்ரிக் மூலம் கண்டுபிடிக்கலாம்

image

உங்கள் போன் தொலைந்து விட்டதா அல்லது திருடுபோனதா? போலீசில் புகாரளிப்பதற்கு முன் இதை செய்யுங்கள். ➤மற்றொரு ஸ்மார்ட்போன் (அ) லேப்டாப்பை எடுத்துக் கொள்ளுங்கள் ➤தொலைந்த போனில் உள்ள Gmail id-ஐ இதில் Login செய்யுங்கள் ➤Find My Device என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள் ➤நீங்கள் தேடும் Device-ஐ க்ளிக் செய்யுங்கள் ➤சில நொடிகளில், உங்கள் ஸ்மார்ட்போன் இருக்கும் Location-ஐ காணமுடியும். SHARE.

News February 12, 2026

சபாநாயகர் சேரில் அமர மாட்டேன்: ஓம் பிர்லா

image

தன்மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு முடிவு கிடைக்கும் வரை சபாநாயகர் நாற்காலியில் அமரப் போவதில்லை என ஓம் பிர்லா முடிவு செய்துள்ளார். பார்லி.,யில் பேச்சுரிமை பறிக்கப்படுவதாக எதிர்கட்சி MP-க்கள் 118 பேர் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் கையெழுத்திட்டனர். இதன்மீது மார்ச்.9-ல் விவாதம் நடைபெறும் என கூறப்படும் நிலையில், தனிப்பட்ட முறையில் ஓம் பிர்லா இம்முடிவை எடுத்துள்ளார்.

error: Content is protected !!