News December 7, 2024

போதை மாத்திரைகள் விற்ற நால்வர் கைது

image

வண்ணாரப்பேட்டையில், தனிப்படை உதவி ஆய்வாளர் பிரவீன்குமார் தலைமையிலான போலீசார், போதை மாத்திரைகள் உபயோகித்தோரை பிடித்து தீவிரமாக விசாரித்தனர். அவர்கள், குன்றத்துாரில் இருந்து போதை மாத்திரைகள் வாங்கி வந்து பயன்படுத்துவதாக தெரிவித்தனர். போலீசார் விசாரித்து குன்றத்தூரைச் சேர்ந்த வெங்கடேஷ் (24), சூரியபிரகாஷ் (23), கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த ஆகாஷ்ராஜா (21), 17 வயது சிறுவன் உள்பட 4 பேரை கைது செய்தனர்.

Similar News

News August 20, 2025

காஞ்சிபுரம்: IOB வங்கியில் வேலை வேண்டுமா?

image

காஞ்சிபுரம் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<> இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. (SHARE பண்ணுங்க)

News August 20, 2025

ஸ்ரீபெரும்புதூர்: பிரியாணி அபிராமியாக மாறிய பவானி

image

ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் ஹிரி கிருஷ்ணன். இவரது மனைவி பவானி. இவர்கள் அப்பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்தனர். அக்கடையில் பிரியாணி மாஸ்டராக வேலை செய்து வந்த மதன்ராஜ் என்பருடன் பவானிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த ஹரி கிருஷ்ணன், மதன்ராஜை வேலையிலிருந்து நீக்கி உள்ளார். இதனையடுத்து ஹரிகிருஷ்ணனை, மதன்ராஜ் கொலை செய்ய ரூ.15 லட்சம் கூலி படைக்கு கொடுத்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

News August 20, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

image

காஞ்சிபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (ஆகஸ்ட் 20) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு சாய் மனோன்மணி திருமண மண்டபம், மாங்காடு பகுதிக்கு K.K.நகர் சமுதாய நலக்கூடத்திலும், குன்றத்தூருக்கு துண்டல்கழனி JC மஹாலிலும், திருப்பெரும்புதூருக்கு சந்தவேலூர் அரசு உயர்நிலைப் பள்ளி அருகிலும், வாலாஜாபாத் பகுதிக்கு ஏனாத்தூர் ஊராட்சி தொடக்கப்பள்ளியிலும் நடைபெற உள்ளது.

error: Content is protected !!