News December 31, 2025
போதையில் இருப்பவர்களுக்கு இன்று Free Ride!

புத்தாண்டு கொண்டாட்டத்தில் அளவுக்கு அதிகமாக போதையில் இருப்பவர்களை இலவசமாக வீட்டிற்கு அழைத்து செல்ல உள்ளதாக தெலங்கானா டெலிவரி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று இரவு 11 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை இந்த இலவச சேவை வழங்கபட உள்ளது. இதற்காக 500 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சேவையை பெற விரும்புவர்கள் 8977009804 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News February 9, 2026
விசில் தடைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை: TNCA

உலகக்கோப்பை போட்டியையொட்டி சேப்பாக்கம் மைதானத்திற்குள் விசில் தடை செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையானது. இந்நிலையில், மைதானத்தில் விசில் தடை செய்யப்பட்டதில் தங்களுக்கோ BCCI-க்கோ தொடர்பில்லை என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) விளக்கம் அளித்துள்ளது. தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், உதயநிதி தொகுதியில் நடந்த இச்சம்பவத்தில் அரசியல் தலையீடு உள்ளதா என தற்போது கேள்வி எழுந்துள்ளது.
News February 9, 2026
அண்ணாமலை விலகியது குறித்து பாஜக ஆலோசனை

தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக கடந்த சில நாள்களுக்கு முன்பு <<19045262>>அண்ணாமலை அறிவித்திருந்தார்<<>>. பாஜகவில் நிலவும் கருத்து வேறுபாடே அவரின் இந்த முடிவுக்கு காரணம் என பேச்சு எழுந்தது. இந்நிலையில், சென்னை கமலாலயத்தில் பாஜக தேர்தல் அறிக்கை மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அண்ணாமலையின் இந்த முடிவுக்கு காரணம் என்ன என்பது குறித்தும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
News February 9, 2026
பொதுத்துறை நிறுவனங்களை சீரழித்ததே திமுக: அன்புமணி

ஒரே ஆண்டில் ₹26,867 கோடி மானியம் அளித்தும் TN-ன் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ₹16,048 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அன்புமணி விமர்சித்துள்ளார். 102 பொதுத்துறை நிறுவனங்களில் 54 லாபத்திலும், 34 நட்டத்திலும் இயங்கி வருவதாகவும், அவை சீரழிந்து வரியல்லாத வருவாய் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் TN-ன் பொதுத்துறை நிறுவனங்களை இப்படி சீரழித்ததே திமுகவின் சாதனை என்றும் சாடியுள்ளார்.


