News August 10, 2024
போதைப் பொருட்கள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கூட்டம்

அரியலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ எனும் இலக்கை அடையும் வகையில் போதைப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் பிரதான கூட்டங்களில் நடைபெற்றது. இதில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News August 20, 2025
கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – எச்சரிக்கை

கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, மேட்டூரிலிருந்து காவிரியாற்றில் உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது. பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்க வேண்டாம் என்றும், பாதுகாப்பாக இருக்குமாறும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News August 20, 2025
அரியலூர்: SBI வங்கியில் வேலை வாய்ப்பு

அரியலூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates (Customer Support and Sales) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இங்கே <
News August 20, 2025
அரியலூர்: கோழி பண்ணை அமைக்க 50% மானியம்

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் உங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க! <<17460375>>(பாகம்-2)<<>>