News January 25, 2025
“போதைப் பொருட்களை வேண்டாம் என்று சொல்லுங்கள்”

சேலம் போலீசார் நேற்று தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் ஒரு விழிப்புணர்வு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “say no to drugs”என்ற கருத்தைப் பதிவிட்டுள்ளனர். இளைஞர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகிவிடக் கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக போலீசார், தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 10, 2025
சேலம்: 19 ஜோடிகளுக்கு இலவச திருமணம்!

சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், தருமபுரி மாவட்டங்களில் கோயில்கள் சார்பில் இலவச திருமணம் செய்ய 19 ஜோடிகள் தேர்வுச் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஜோடிகளுக்கு வரும் செப்.14- ஆம் தேதி திருமணம் நடக்கிறது. அதில் திருமாங்கல்யம் 4 கிராம் தங்கம், மணமக்களுக்கு ஆடை,மணமக்கள் வீட்டாரின் 20 பேருக்கு உணவு,மாலை, கட்டில்,பீரோ,மெத்தை,தலையணை, பாய் உள்ளிட்ட பொருட்கள் பொருட்கள் வழங்கப்படுகிறது.
News September 10, 2025
சேலம்: உளவுத்துறையில் 394 பணியிடம்!

▶️ உளவுத்துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களுக்கு https://www.mha.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்
▶️மாதம் ரூ.25,500 – ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும்
▶️ BA,BSc,BE,B.TECH படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
▶️ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு,நேர்காணல் என 3 தேர்வுகள் நடைபெறும்.
▶️ விண்ணப்பிக்க செப்.14 கடைசி நாளாகும்
▶️ இதனை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News September 10, 2025
சேலம் சரகத்தில் 169 வாகனங்கள் பறிமுதல்

சேலம் சரகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட சோதனையில் விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கியவர்களிடம் இருந்து ரூபாய் 79 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. அதிகபாரம் ஏற்றி வந்த லாரிகள், பர்மிட் இல்லாமல் இயக்கியது உள்ளிட்ட காரணங்களுக்கு 54 லாரிகள் உள்ளிட்ட 169 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து வாகன தணிக்கை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.