News October 24, 2024
போதைப்பொருள்கள் தடுக்க ஆட்சியர் நடவடிக்கை

குமரி மாவட்டத்தில் மாணவர்களுக்கு போதைப்பொருள்கள் கிடைப்பதை தடுக்க விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 6 மற்றும் 7ஆம் வகுப்பு மாணவர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஊராட்சிகளில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கை முழுமையாக சென்றடையவில்லை. எனவே, ஊராட்சி பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று கூறினார்.
Similar News
News August 10, 2025
திருவனந்தபுரம் – நாகர்கோவில் ரயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க கோரிக்கை

ஆக.10 திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பகல் நேரங்களில் இந்த ரயில் வரும் நிலையிலும், நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு பகல் நேரங்களில் ரயில் போக்குவரத்து இல்லாத சூழ்நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு திருவனந்தபுரம் – நாகர்கோவில் ரயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
News August 10, 2025
குமரியில் மீண்டும் தொடங்கிய படகு போக்குவரத்து

கன்னியாகுமரி கடலில் இன்று காலை தாழ்வான நீர்மட்டம் காரணமாக திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது நீர்மட்டம் சீரானதையொட்டி விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தொடங்கியுள்ளது.
News August 10, 2025
வாக்காளர் பட்டியல் திருத்தம்: பீகார் தொழிலாளர் விவரம் பதிவு செய்க

நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் தமிழ்ச்செல்வன் நேற்று(ஆக.9) கூறியதாவது, “பீகாரில் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடக்கிறது. இதில் நெல்லை, குமரி மாவட்டத்தில் பணியாற்றும் பீகார் தொழிலாளர்கள் மொபைல் செயலியில் தங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்து குடும்ப உறுப்பினர்களிடம் வாட்ஸ்அப்பில் அனுப்பி உதவ நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.