News September 13, 2024
போதகாட்டில் மனைவிய அடித்துக் கொன்ற கணவன் கைது

பாப்பிரெட்டிபட்டி அடுத்த போதகாடு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ். இவரது மனைவி ஆர்த்தி கடந்த 10-ம் தேதி மர்மமாக இறந்தார். இதுகுறித்து அரூர் டிஎஸ்பி ஜெகநாதன் விசாரணை மேற்கொண்டார். அப்போது குடும்பத்தகராறில். மனைவி ஆர்த்தியை கணவன் கோவிந்தராஜ் அடித்துக் கொன்றது தெரியவந்துள்ளது. எனவே, பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் அவரை கைது செய்து அரூர் நீதிபதியிடம் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
Similar News
News November 8, 2025
தர்மபுரி இரவு ரோந்து காவலர் விபரம்!

தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (08.11.2025) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர், பாலகிருஷ்ணன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நெடுஞ்செழியன் , தோப்பூரில் கேசவன் , மதிகோன்பாளையத்தில் திருப்பதி மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.
News November 8, 2025
தருமபுரி பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் இங்கு <
News November 8, 2025
தருமபுரி: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

10, +2 மதிப்பெண் சான்றிதழ், ஏதேனும், அரசு ஆவணங்கள் தொலைந்துவிட்டால், அரசு அலுவலகங்களுக்கு ஏறி இறங்க வேண்டியதில்லை. இனி ஈசியாக ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். அரசின்<


