News February 1, 2026

போண்டா சாப்பிட்டபோது மரணம்.. அதிர்ச்சி

image

ஹைதராபாத்தில் போண்டா சாப்பிட்டு கொண்டிருக்கும்போதே 45 வயது நபர் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொண்டையில் போண்டா சிக்கியதில் மூச்சு விட முடியாமல் அவரது உயிர் பிரிந்துள்ளது. இதுபற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர். நாம் சாப்பிடும் பொருள்களின் தன்மையை அறிந்து (நீர் ஆகாரங்கள், திட பொருள்கள்) அதற்கேற்ப சாப்பிட வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Similar News

News February 2, 2026

விஜய் எப்போது ஊடகத்தை சந்திப்பார்? அருண்ராஜ் பதில்

image

தவெக தொடங்கி 3 ஆண்டுகளான சூழலில் இதுவரை விஜய் செய்தியாளர்களை சந்திக்காதது தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து தவெகவின் அருண்ராஜிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு CM ஸ்டாலின் எப்போது உண்மையான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துகிறாரோ, அதற்கு அடுத்த நாள் விஜய் ஊடகத்தை சந்திப்பார் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

News February 2, 2026

CINEMA 360°: நாளை ‘அரசன்’ புரோமோ ரிலீஸ்?

image

*சூர்யாவின் ‘கருப்பு’ படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது *‘சார்பட்டா பரம்பரை’ & ‘ப்ளூ ஸ்டார்’ படங்களின் எழுத்தாளர் தமிழ்பிரபாவின் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளார் *STR பிறந்தநாளை முன்னிட்டு, நாளை ‘அரசன்’ பட புரோமோ வெளியாகலாம் என கூறப்படுகிறது *‘லெஜண்ட்’ சரவணன் நடித்துள்ள அடுத்த படத்தின் அப்டேட் வரும் 4-ம் தேதி மதியம் 2:10-க்கு வெளியாகவுள்ளது.

News February 2, 2026

‘Hire சைக்கிள்’ என்னும் அற்புதம்!

image

வீடுதோறும் 2-3 பைக்குகள் உள்ள இந்த ஜெனரேஷனுக்கு ‘Hire சைக்கிள்’ என்ற அற்புதம் தெரிந்திருக்காது. ஒரு மணி நேரத்திற்கு 50 பைசாதான். ரெஜிஸ்டரில் எழுதிவிட்டு, சைக்கிளை எடுத்தால், திரும்ப கொடுக்கவே மனம் இருக்காது. காதல் வளர்த்தது முதல் வேலை தேடி அலைந்தது வரை, வாழ்வின் அங்கமாகவே இருந்த Hire சைக்கிள்கள் இன்று எங்குமே இல்லை. உங்களுக்கு ‘Hire சைக்கிள்’ எடுத்த பழக்கம் இருக்கா?

error: Content is protected !!