News August 12, 2025

போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி புத்தகங்கள் வழங்கல்

image

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வப் பயிற்சி மையத்தில் பயிலும் நபர்களுக்கு, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் போட்டித் தேர்விற்கான இலவசப் பயிற்சி புத்தகங்களை நேற்று (11.08.2025) வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Similar News

News August 31, 2025

பெரம்பலூர்: ஈஸியா ஆதார் கார்டில் திருத்தம் செய்யலாம்!

image

மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
▶️ முதலில் இங்கே<> கிளிக்<<>> செய்து, ஆதார் எண்ணை பதிவிட்டு Login செய்யவும்
▶️ அப்டேட் பகுதிக்குச் சென்று ‘ADDRESS UPDATE’ என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்
▶️ அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
▶️ முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
▶️ பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News August 31, 2025

பெரம்பலூர்: புதிய கலெக்டர் பற்றிய தகவல்கள்!

image

ந.மிருணாளினி 2001ல் கூட்டுறவுத் துறையில் துணைப்பதிவாளராக பணி நியமனம் பெற்றார். பின்னர் இணைப் பதிவாளராக புதுகை, திருச்சி, கடலூா் ஆகிய மாவட்டங்களிலும், சென்னையில் கூடுதல் பதிவாளராகவும் பணிபுரிந்தார். கடந்த 2023-ல் இந்திய ஆட்சிப் பணிக்கு பதவி உயா்வு பெற்ற இவர், ஸ்ரீபெரும்புதூா் சாா்-ஆட்சியராக பதவி வகித்து, தற்போது பெரம்பலூா் மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ளாா். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News August 31, 2025

செட்டிகுளத்தில் பட்டப் பகலில் பைக்கை திருடிய வாலிபர்

image

செட்டிகுளத்தில் பைக்கை திருடிய வாலிபரை பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவர் நேற்று செட்டிகுளம் சென்ற அருண்குமார் (29) அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு SBI வங்கிக்கு சென்று உள்ளார். அப்போது அங்கு வந்து ஒருவர் அவரது பைக்கை திருட முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்து அருண்குமார் மற்றும் அங்கிருந்தவர்கள் அவரைப் கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!