News March 18, 2025

போடி-மதுரைக்கு காலை ரயில் இயக்க பரிசீலனை

image

மதுரை-போடி இடையே உள்ள 96 கி.மீ., தூர அகல ரயில் பாதை தற்போது ரூ.98.33 கோடி செலவில் மின் மயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கரிசல் கிஷோர் மதுரை – போடி இடையே ரயில்வே ட்ராக்கை ஆய்வு செய்தார். அதிகாரிகளிடம் போடியிலிருந்து மதுரைக்குக் காலையில் ரயில் இயக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இத்திட்டம் பரிசீலனையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News March 18, 2025

தேனி : நடப்பாண்டு வரியை செலுத்த  கடைசி தேதி 

image

தேனி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில் நிலுவை மற்றும் நடப்பாண்டு வீட்டுவரி, குடிநீர் வரி, தொழில்வரி மற்றும் தொழில் உரிமம் கட்டணம் தற்போது வசூல் செய்யப்படுகிறது. பொதுமக்கள் வரும் 31 ம் தேதிக்குள் வரியினங்களை செலுத்த வேண்டியது கட்டாயக் கடமை மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-இன்படி முறையாக வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார

News March 18, 2025

2024.ல் 1330 விபத்துகளில் 408 பேர் உயிரிழப்பு

image

தேனி மாவட்டத்தில் 5 போலீஸ் சப் டிவிஷன்கள் உள்ளன. இந்த சப் டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2023-இல் 1174 விபத்துகளில் 330 பேர் உயிரிழந்துள்ளனர் அதே சமயம் 2024.ம் ஆண்டு 56 விபத்துக்கள் அதிகரித்து மொத்தம் 1230 விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. இதில் மொத்தம் 408 பேர் உயிரிழந்துள்ளனர். வரும் காலங்களில் விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

News March 18, 2025

தாமதமாக வந்த அதிகாரிகளை தவிக்க விட்ட தேனி கலெக்டர்

image

மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு முன் நடக்கும் அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் தேனி கலெக்டர் ரஞ்சித்சிங் தலைமையில் நேற்று மார்ச் 17 காலை 9:00 மணிக்குத் துவங்கியது. காலை 9:15 மணிக்கு மேல் வந்த 12 அதிகாரிகளை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க அவர் அனுமதிக்கவில்லை. கூட்ட அரங்கிற்கு வெளியே அவர்கள் காத்திருந்தனர். மீண்டும் 10:30 மணிக்கு மக்கள் குறைதீர் கூட்டம் துவங்கியதும் அதிகாரிகள் உள்ளே சென்றனர்.

error: Content is protected !!