News April 11, 2025
போடி: திருக்கல்யாண தேங்காய் ரூ.52,000-க்கு ஏலம்

போடி சுப்பிரமணியர்சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று (ஏப்.10) நடைபெற்றது. இந்த திருக்கல்யாண வைபவத்தில் அபிஷேகத்திற்கு வைக்கப்பட்ட ஒரு தேங்காய் ஏலம் விடப்பட்டது. அந்த தேங்காயை போடி குலாலர் பாளையத்தை சேர்ந்த பழனியாண்டவர் என்பவர் ரூ.52 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார்.
Similar News
News April 18, 2025
தேனி மாவட்ட இரவு ரோந்து காவலர்களின் விவரம்

தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (ஏப்.18) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News April 18, 2025
தேனி : உள்ளூரிலேயே வேலை வேண்டுமா?

தேனி மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 25.04.2025 அன்று காலை10 மணி முதல் 5.00 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு , ஐ.டி.ஐ ஆகிய கல்வித் தகுதி உடையோர் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள <
News April 18, 2025
தேனி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விபரம்

தேனி மாவட்ட அணைகளின் இன்றைய(ஏப்.18) நீர்மட்டம்: வைகை அணை: 56.27 (71) அடி, வரத்து: 52 க.அடி, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 113.90 (142) அடி, வரத்து: 105 க.அடி, திறப்பு: 105 க.அடி, மஞ்சளார் அணை: 34.50 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 98.07 (126.28) அடி, வரத்து: 5.62 க.அடி, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 39 (52.55) அடி, வரத்து: 3 க.அடி, திறப்பு: இல்லை.