News August 8, 2025
போடி: கடன் தொல்லையால் பெண் தற்கொலை

போடியை சேர்ந்தவர் சீனியம்மாள் (60). இவர் மகளிர் குழு தலைவியாக இருந்து வரும் நிலையில் இவரது குழுவில் 60 பெண்களுக்கு லோன் வாங்கி கொடுத்துள்ளார். அவற்றில் சிலர் லோன் கட்டாததால் இவர் கடன் வாங்கி அதனை செலுத்தியுள்ளார். இந்நிலையில் கடன் தொல்லை அதிகரித்ததால் மன உளைச்சலில் இருந்து வந்த சீனியம்மாள் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போடி போலீசார் வழக்குப்பதிவு.
Similar News
News August 8, 2025
தேனி இளைஞர்களே வேலை – ரூ.62265 வரை சம்பளம்

ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் Assistant பதவிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில், தமிழகத்தில் இருந்து 74 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பதவிக்கு ரூ.22405 – ரூ.62265 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணபிக்க கடைசி தேதி – 17.08.2025. மேலும் விவரங்களுக்கு <
News August 8, 2025
தேனியில் இலவச தையல் மிஷின் APPLY பண்ணுங்க!

தேனியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தேனி மாவட்ட சமூக நல அலுவலரை 04546-254368 அணுகவும். இத்தகவலை SHARE செய்யவும்.
News August 8, 2025
தேனி மக்களே! என்னபா போவாமா?

தேனிவாசிகளே! ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை சென்று தரிசித்தால் மனதில் அமைதி பெருகி இன்பம் வழிபிறக்கும். இதற்காகும் பண செலவை நினைத்தாலே நம் தலையே சுத்தும். இதற்காகவே இந்து சமய அறநிலையத் துறை சார்பில், அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிக பயணம் அழைத்து செல்ல உள்ளது. ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை காண விரும்புவோர் இந்த <