News April 17, 2025
போடி அருகே கார் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

போடி அருகே ராசிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (42). இவர் நேற்று (ஏப்.16) அப்பகுதியில் உள்ள சாலையின் ஓரமாக நடந்து சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியாக கார் ஒன்று இளங்கோவன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
Similar News
News April 19, 2025
கத்தியை காட்டி வழிப்பறி: மூன்று சிறுவர்கள் கைது

தேனி, பெரியகுளத்தை சேர்ந்தவர் குணசீலன் 27. தேனியிலிருந்து பைபாஸ் ரோட்டில் டூவீலரில் இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது குணசீலனை கத்தியை காட்டி 3 பேர் பணம் கேட்டு மிரட்டினர். குணசீலன் தன்னிடம் பணம் இல்லை என்றார். மூவரும் அவரது ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள அலைபேசியை வழிப்பறி செய்து தப்பினர்.போலீசார் வடுகபட்டியைச் சேர்ந்த 17 வயது 3 சிறுவர்களை கைது செய்து அலைபேசியை கைப்பற்றினார்.
News April 18, 2025
தேனி மாவட்ட இரவு ரோந்து காவலர்களின் விவரம்

தேனி மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரங்களை தினமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (ஏப்.18) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இரவு நேரங்களில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News April 18, 2025
தேனி : உள்ளூரிலேயே வேலை வேண்டுமா?

தேனி மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 25.04.2025 அன்று காலை10 மணி முதல் 5.00 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு , ஐ.டி.ஐ ஆகிய கல்வித் தகுதி உடையோர் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள <