News October 16, 2025

போடி அருகே அரசு பஸ் மோதி பெண் படுகாயம்

image

போடி பகுதியை சேர்ந்தவர் முருகம்மாள் (45). இவா் போடி பேருந்து நிலையத்திற்குள் நடந்து சென்றுள்ளாா். அப்போது போடி பேருந்து நிலையத்திலிருந்து மூணாறு சென்ற அரசு பேருந்து இவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் முருகம்மாள் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து போடி நகர் போலீஸார் பேருந்து ஓட்டுனர் ராஜாராம் (51) மீது வழக்கு (அக்.15) பதிவு.

Similar News

News October 16, 2025

தேனி: மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

image

கம்பம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (55). வெல்டிங் ஒர்க் வேலை செய்து வரும் இவர் நேற்று முன்தினம் கம்பம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மாடியில் கிரில் பொருத்தும் வேலை செய்து வந்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக கிரில் மின்சார வயர் மீது பட்டு கருப்பையா மீது மின்சாரம் தாக்கியது. அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிர் இழந்தார். கம்பம் போலீசார் வழக்கு (அக்.15) பதிவு.

News October 16, 2025

தேனி: ரூ.35,400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை

image

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 3073 Sub-Inspector பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்கள் : 3073
கல்வித் தகுதி: டிகிரி
சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
கடைசி நாள் :16.10.2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>இங்கே CLICK <<>>செய்க.
இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News October 16, 2025

தேனி: மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை-தீர்ப்பு

image

ஆண்டிபட்டி தாலுகாவை சேர்ந்த 16 வயது மாற்றுத்திறனாளி சிறுமி. 2022.ல் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சுதாகரன் (22) என்பவர் துாங்கி கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் இடையூறு செய்துள்ளார். இவரை போலீசார் கைது செய்த நிலையில் வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கின் தீர்ப்பாக நேற்று (அக்.15) சுதாகரனுக்கு 5 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டது.

error: Content is protected !!