News January 24, 2026
போடியில் இளைஞர் தற்கொலை

போடி திருமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் உதயசூரியன். இவரது மகன் பாண்டி கண்ணன் (28). மகனுக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால், திருமணம் செய்ய தற்போது விருப்பம் இல்லை என பாண்டி கண்ணன் கூறி வந்துள்ளார். தொடர்ந்து பெற்றோர்கள் வற்புறுத்தியதால் மனம் உடைந்த பாண்டி கண்ணன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போடி போலீசார் வழக்குப்பதிவு.
Similar News
News January 31, 2026
தேனி: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

தேனி மக்களே, உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். இங்கே <
News January 31, 2026
தேனி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 31, 2026
தேனி: 124 கிலோ புகையிலை கடத்தல்

கடமலைக்குண்டு காவல் நிலைய போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (ஜன.30) வாகன சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 124 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த போலீசார் புகையிலைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட முருகன் (53), பிரபாகரன் (32) ஆகிய இருவரை கைது செய்தனர்.


