News August 23, 2025
போச்சம்பள்ளியில் இலவச மருத்துவ முகாம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சிகரம் அரிமா சங்கம் மற்றும் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் இருதய மருத்துவமனை இணைந்து, நாளை (ஆக.24) இலவச இருதய நோய் மற்றும் நீரிழிவு நோய் பரிசோதனை முகாமை நடத்துகின்றன. அரசம்பட்டி ஏ.கே.ஜி. திருமண மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறும் இம்முகாமில், சர்க்கரை மற்றும் இருதயப் பரிசோதனைகள் இலவசமாகச் செய்யப்படுகின்றன. SHARE பண்ணுங்க.
Similar News
News March 8, 2026
கிருஷ்ணகிரி : இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் இங்கே <
News March 8, 2026
கிருஷ்ணகிரி: தனிமையில் போக பயமா? இனி கவலை வேண்டாம்!

கிருஷ்ணகிரி மக்களே.., மகளிர் பாதுகாபிற்காக அரசு அறிமுகப்படுத்திய செயலி காவல் உதவி. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என உணர்ந்தால் இந்த செயலியில் உள்ள பொத்தானை அமுக்கினால் போதும், போலீஸ் உதவி உங்களைத் தேடி வரும். மேலும், குடும்பத்தில், பணியிடத்தில் அச்சுறுத்தல், வன்முறை நிகழ்ந்தால் உடனே 181-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்.
News March 8, 2026
கிருஷ்ணகிரி: கட்சித் தாவிய 300 பேர்

காவேரிப்பட்டிணம் மேற்கு ஒன்றியம், பண்ணிஅள்ளி ஊராட்சியில், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சபரி மற்றும் காவேரிப்பட்டினம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சரவணன் ஏற்பாட்டில், நேற்று மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர், மாவட்ட கழக செயலாளர் மதியழகன் MLA முன்னிலையில் தங்களை திமுகவில் இணைந்துக் கொண்டனர்.


