News April 24, 2025
போக்சோ வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்செல்வம். இவர் கடந்த 2019-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று அருள்செல்வத்திற்கு ஆயுள் தண்டனையும், ரூ.15,000 அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
Similar News
News April 24, 2025
திருச்செந்தூர் சித்திரை வசந்த திருவிழா அறிவிப்பு

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 10 நாட்கள் சித்திரை வசந்த திருவிழா சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா மே.3 அன்று தொடங்கி மே.12 வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் சுவாமி ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தில் அருள்பாளிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
News April 23, 2025
தூத்துக்குடி:ஆத்தூர் வெற்றிலையின் ருசியின் ரகசியம்

ஆத்தூர் வெற்றிலைக்கு 2023-ம் ஆண்டு புவிசார் குறியீடு கிடைத்தது. ஆத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் வெற்றிலை காரத்தன்மை கொண்ட ருசியுடன் காணப்படுகிறது. ஆத்தூர் வெற்றிலை ருசியின் ரகசியம் இப்பகுதியில் பாய்ந்து ஓடும் தாமிரபரணி ஆற்றின் நீர் தான் காரணம் என்று கூறப்படுகிறது. செரிமான சக்தியை ஊக்குவிக்கும் ஆத்தூர் வெற்றிலை இந்தியா முழுவதும் ஏற்றுமதி ஆகிறது. *SHAREIT*
News April 23, 2025
தூத்துக்குடி: செம்மொழி தின பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டி

செம்மொழி தினம் வரும் ஜூன் 3 கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட 11,12ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களிடையே செம்மொழி குறித்த பேச்சு & கட்டுரைப் போட்டிகள் ஜூன் 9 -ல் நடைபெற உள்ளது. விருப்பம் உள்ள மாணவர்கள் https://tamil valarchi.tn.gov.in இணைய தளத்தில் தலைமையாசிரியர் / முதல்வர் பரிந்துரையுடன் விண்ணப்பிக்கலாம். தகவலை மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.