News January 3, 2025

போக்சோ வழக்கில் இளைஞர் மீது வழக்கு

image

நெல்லிக்குப்பம் அருகே முள்ளிகிராம்பட்டை சேர்ந்தவர் ராஜ்குமார் மகன் சசிகுமார் (19). இவர் கடலூரில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 16 வயதுடைய சிறுமியிடம் பழகி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த சிறுமியை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுமி 2 மாத கர்ப்பமானார். இது குறித்து பண்ருட்டி போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் சசிகுமார் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 19, 2025

கடலூர்: இலவச ஓட்டுநர் பயிற்சி

image

கடலூர் இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் இலவச இலகுரக வாகன (Light Motor Vehicle – LMV) ஓட்டுநர் பயிற்சி 30 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் இன்று (செப்.19) முதல் விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கான நேர்காணல் செப்.25-ம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 04142-796183 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News September 19, 2025

கடலூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

கடலூர் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 19, 2025

கடலூர் அருகே இளைஞர் கொலை ?

image

பண்ருட்டி அருகே கட்டியாம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (30). கட்டிட தொழிலாளியான, இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள குளத்தில் ரத்த காயங்களுடன் கார்த்திக் பிணமாக கிடந்துள்ளார். இதையடுத்து உடலை கைப்பற்றிய பண்ருட்டி போலீசார் இளைஞர் கொலை செய்யப்பட்டாரா? எனும் கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!